தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் விலையை 72 மணி நேரத்திற்குள் குறைக்காவிட்டால் நாங்கள் அறிவாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அண்ணாமலை பரபரப்பை கிளப்பியுள்ளார்.
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 9.5 ரூபாய்க்கும் 6 ரூபாய்க்கு முறையே வரியை குறைத்து உள்ளது. அதனால் பெரும்பாலான இடங்களில் இது அமலுக்கு வந்துவிட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சென்னைக்கு திரும்பிய அண்ணாமலையை ஏர்போர்ட்டில் நிருபர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது கூறிய அவர் :-
“ஒரு பக்கம் கச்சா எண்ணெய் விலை உயருகிறது அதனை பிரதமர் மோடி குறைத்திருக்கிறார். திமுக அரசியல் தன்மை இல்லாத அரசு. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்யாமல் உள்ளது. அரசியல் லாபத்திற்காக திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்போம் என்று கூறியுள்ளது. அடுத்த 72 மணி நேரத்திற்குள் நீங்கள் கொடுத்த வாக்குறுதிப்படி பெட்ரோல் டீசல் விலையில் ரூபாய் 5 குறைக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் பாஜக போராட்டத்தில் ஈடுபடும் உங்கள் கோட்டையை முற்றுகையிடும் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ராஜீவ் காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு மாலையில் அவரது இறப்புக்கு காரணமான பேரறிவாளனை கட்டித்தழுவி போட்டோவை வெளியிடுகின்றனர். முதல்வர் வடிவேலு போல செயல்படுகிறார் பேரறிவாளனை முதல்வர் கட்டித் தழுவி வரவேற்றல் இந்தியா அதிர்ச்சியில் இருக்கிறது. இதுபோன்று முதல்வர் நடந்து கொள்வதால் தமிழ் நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருகிறது என பேசினார்.
