தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு யூடிபில் வெளியாகிறது.
அண்ணாமலை கர்நாடகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பொறுப்பு வகித்து வந்தார். அப்போதிலிருந்து கர்நாடகாவில் அதிரடி நடவடிக்கைகள் மூலமாக மிகவும் பிரபலமானார். பின்னர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேரமாக அரசியலுக்குள் நுழைந்தார். அதன் பின்னர் பாஜகவின் தமிழக தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

இவர் நியமிக்கப்பட்டதிலிருந்து ஆளு கட்சியான திமுகவை கடும் விமர்சனம் செய்துவந்தார். இந்நிலையில் இவர் தற்போது “அரபி எனப்படும்” ஒரு கன்னட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இரு கைகளை இழந்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஸ் நடித்துள்ளார். இரு கைகளையும் இழந்த விஸ்வாஸிற்கு நீச்சல் பயிற்சி அளிக்கும் நபராக அண்ணாமலை நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் இன்று மாலை யூடியூபில் வெளியாக உள்ளது இளைஞர்களுக்கு நல்ல உத்வேகம் தரக்கூடிய ஒரு கதாபாத்திரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ளதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. முழுநேரமாக அரசியலில் இருக்கும் அண்ணாமலை எப்படி திரைப்படத்தில் நடித்தார் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போட்டோக்களும் தற்போது வைரல் ஆகி அதை உறுதி செய்துள்ளது. எனவே இன்று மாலை 4மணிக்கு வெளியாகும். அண்ணாமலை படத்தின் டீசருக்கு அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். மேலும் அவர் இந்த படத்திற்கு 1 ரூபாய் மட்டுமே ஊதியமாக பெற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
