“பாஜகவினர் எப்போதுமே ஆக்ரோஷமாகத்தான் இருப்பார்கள், அவர்களை அப்படி வைத்து கொள்வது தான் என்னுடைய வேலை” – அண்ணாமலை

பாஜகவினர் எப்போதுமே ஆக்ரோஷமாகத்தான் இருப்பார்கள் என அண்ணாமலை பேசியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பாஜகவுக்கும் திமுகவுக்கும் மோதல் போக்கு நீண்டு கொண்டே போகிறது. திமுக எந்த திட்டத்தை கையில் எடுத்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடி பிடித்து விடுகிறது அண்ணாமலையின் பாஜக. இதனாலேயே திமுகவிற்கும் பாஜகவிற்கும் கடந்த ஓராண்டுகளாகவே பனிப்போர் நீண்டு வருகிறது.

“தமிழ்நாட்டில் 70 சதவீத வாக்குறுதிகள் நிறைவேறியுள்ளது” – முக ஸ்டாலின்

தமிழக ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரை வந்திருந்த பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் செருப்பை அடித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் கோபம் அடைந்த பி டி ஆர் இதனை ட்விட்டரில் பதிவிட்டார். அப்போது அண்ணாமலையின் ஆடியோ என்று ஒரு ஆடியோ வந்தது. அதில் அண்ணாமலை பேசுவது போல உள்ளது. இந்த இழப்பை வைத்தும் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பைக் கொண்டு அடித்ததை வைத்தும் நாம் அரசியல் செய்ய வேண்டும் என பேசியது படி அந்த ஆடியோ உள்ளது.

“PTR நீங்க என்னுடைய செருப்புக்கு கூட சமம் இல்லை” – அமைச்சர் PTR குறித்து சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியிருக்கும் அண்ணாமலை

அந்த ஆடியோவிற்கு தற்போது விளக்கம் அளித்திருக்கும் அண்ணாமலை அது என்னுடைய ஆடியோ தான். ஆனால் அதில் நான் பேசியதை கொஞ்சம் கொஞ்சமாக கட் செய்து போட்டு விட்டனர். முழுமையாக அதைக் கேட்டால் நான் என்ன கூற வருகிறேன் என்பது புரியும் என பேசி உள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாட்டில் பாஜகவினர் எப்போதுமே மூர்க்கத்தனமாக தான் இருப்பார்கள் அவர்களை ஆக்ரோஷமாக எப்போதுமே வைத்துக் கொள்வதுதான் என்னுடைய பணி. இந்த சாஃப்ட் அரசியல் எல்லாம் தமிழ்நாட்டிற்கு செல்லாது.

அதனால் அதை நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம் எனக் கூறி அந்த ஆடியோவையும் முழுவதுமாக ரிலீஸ் செய்ய சொன்னார் மேலும் பழனிவேல் தியாகராஜன் பேசியதும் அதில் இருக்கும் எனக்கு தமிழ் தெரியாது அதனால் சில வார்த்தைகளை பேசி விட்டேன் என அவர் கூறுகிறார். தமிழ்நாட்டின் அமைச்சராக இருந்து கொண்டு தமிழ் பேசத் தெரியாது என்பது ஏற்புடையது அல்ல என அண்ணாமலை கூறி இருக்கிறார்.

Spread the love

Related Posts

கே.ஜி.எஃப் பட நாயகியின் டூ பீஸ் ஆடை புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்தது | ரசிகர்கள் அதிர்ச்சி

கேஜிஎஃப் பட நாயகி ஸ்ரீநிதி செட்டியின் டூ பீஸ் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி

ஸ்டாலின் ஓராண்டு ஆட்சி காலத்தை குறை கூறிய சீமான் | சீமானை வெச்சி செய்த செந்தில் பாலாஜி | என செய்தார் தெரியுமா ?

திமுக ஆட்சிக்கு வந்து கடந்த 7 ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவு பெற்று இருக்கும் நிலையில்

வெள்ளை நிற ஆடையில் முன்னழகு தெரிய கவர்ச்சி விருந்தளித்திருக்கும் யாஷிகா | மேலும் புகைப்படங்கள் உள்ளே

யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் ஒரு பிஸியான கதாநாயகியாக வலம் வருபவர். கொஞ்ச மாதங்களுக்கு முன்பு