திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நீங்கள் என் செருப்பிற்கு கூட சமம் கிடையாது என சர்ச்சை வார்த்தைகளில் பேசி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
திமுகவிற்கும் பாஜகவிற்கும் கடந்த ஒரு வருட காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. திமுக எதை செய்தாலும் அதை ஒருபுறம் வசை பாடிக் கொண்டே இருக்கிறது தமிழக பாஜக. அதற்கு முக்கிய காரணம் அண்ணாமலையே, திமுகவில் இருக்கும் ஒவ்வொரு அமைச்சர்களின் ஊழலையும் நான் வெளிக்கொண்டு வரப் போகிறேன் என அண்ணாமலை பரபரப்பாக பேசி இருந்தார். அப்போது இருந்து சூடு பிடித்த இந்த சண்டை இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் காஷ்மீரில் இறந்த தமிழக ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரைக்கு வந்த பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் செருப்பைக் கொண்டு அடித்தனர். இந்த விஷயம் சம்பந்தமாக ஒரு ஆடியோவும் வெளியானது. அந்த ஆடியோவில் அண்ணாமலை பேசுவது போல் இருக்கிறது எனும் இந்த ஆடியோ குறித்து சர்ச்சை கடந்த ஒரு சில தினங்களாகவே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இதன் காரணமாகவும் மற்றும் திமுகவிற்கு பாஜக மேல் இருக்கும் வெறுப்பு அரசியலை காரணம் காட்டியும் இந்த வீட்டை அண்ணாமலை போட்டுள்ளதாக பலர் கூறுகின்றனர் அந்த டீவீட்டில் அவர் கூறியிருப்பது என்னவென்றால் :-
“பி டி ஆர் அவர்களே உங்களுடைய பிரச்சனை என்ன ? நீங்களும் உங்கள் கூட்டமும் உங்களுடைய தந்தையின் பெயர்களையும் தாத்தாவின் பெயர்களையும் வைத்து தற்பெருமை பேசுகிறீர்களே, உங்களால் சுயமாக முன்னேறி வந்த ஒரு விவசாயியின் மகனாய் பிறந்து விவசாயம் செய்து கொண்டிருக்கும் நபர்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை ?
நீங்கள் ஒரு ராஜ குடும்பத்தில் பிறந்ததை தவிர்த்து வேறு ஏதாவது சாதனைகளை நீங்கள் செய்து இருக்கிறீர்களா ? நீங்கள் இந்த அரசியலின் சாபக்கேடு நாட்டிற்கும் சாபக்கேடு

நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் உங்களைப் போல் பெரிய பெரிய விமானங்களில் செல்லாத என்னைப் போன்ற ஆட்களும் இங்கு இருக்கிறார்கள். அதைவிட அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான நல்ல மூலையையும் பயன்படுத்துகின்றனர்.

கடைசியாக நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் என் செருப்பிற்கு கூட சமம் கிடையாது. ஒருபோதும் உங்களைப் போன்று நான் கீழ்த்தரமாக திட்டமிட மாட்டேன் கவலை படவேண்டாம்” என்று இவ்வாறாக அவர் மிகவும் சர்ச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி அந்த டுவீட்டை பதிவிட்டு இருக்கிறார் தற்போது இது வைரலாகி வருகிறது.
Finally, You are not worthy enough for my Chappals.
— K.Annamalai (@annamalai_k) August 31, 2022
I’ll never stoop to your level to orchestrate something like that. Don’t worry! (4/4)