தமிழ்நாட்டுக்கு முதலீடு செய்ய வந்த நிறுவனம் கர்நாடாவிற்கு போனது ? ஸ்டாலினிடம் சரமாரியாக கேள்வியெழுப்பியிருக்கும் அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த நிதி ஆண்டை தமிழ்நாட்டில் நேரடி அந்நிய முதலீடு 27.7 சதவீதம் குறைந்திருக்கிறது என்ற செய்தி தற்போது வெளியாகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல புதிதாக தொழில் தொடங்குபவர்களிடம் 30 சதவீத கமிஷன் வசூலிக்க முயற்சிப்பதால் தமிழ்நாட்டில் புதிய நிறுவனங்கள் முதலீடு செய்வதை தவிர்க்கின்றன என்றும் சமீபத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருப்பதாகவும் இதன் மூலம் 6 ஆயிரம் இழைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்த சில மணி நேரத்திலேயே பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் அப்படி எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்று மறுத்ததாக செய்திகள் வெளியானதாக விமர்சித்துள்ளார்.

அதன்பின் உடனடியாக முதலமைச்சர். தனது அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொண்டு விட்டதாகவும் பாக்ஸ்கான் நிறுவன முதலீடு என்ன ஆனது என்பதற்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை எனவும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்.

மேலும் கர்நாடக மாநில அமைச்சர் பிரியங்கா கார்கே பாக்ஸ்கான் நிறுவனம் கர்நாடக மாநில அரசுடன் நான்காயிரத்து தொள்ளாயிரத்து அருவத்தி மூன்று கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக அறிவித்துள்ளதும் அதன் மூலம் 14,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்

இதன்படி பார்த்தால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டின் செய்யவிருப்பதாக சொன்ன முதலீடு தான் கர்நாடக மாநிலத்திற்கு கைமாறி இருக்கிறதா தமிழ்நாட்டில் ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீடு என்று அறிவித்துவிட்டு தற்போது கர்நாடகா மாநிலத்தில் அதைவிட மூன்று மடங்கு அதிகமாக முதலீடு செய்ய என்ன காரணம் என்ற கேள்விகளும் எழுவதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முற்பட்ட நிறுவனம் எதனால் தமிழ்நாட்டை விட்டுவிட்டு இன்னொரு மாநிலத்தில் முதலீடு செய்வது ஏன் என்பவற்றை தெளிவுபடுத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார் இதனால் தமிழ்நாடு இளைஞர்கள் இழந்த வேலை வாய்ப்புகளுக்கு யார் பொறுப்பு என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Spread the love

Related Posts

இனிமேல் புரணி பேசுவியா ? “உலக்கையால்” மனைவியை போட்டு தள்ளிய கணவர் ! அதிர்ந்த சென்னை

சென்னை திருவொற்றியூரில் ஓயாமல் குடும்ப பிரச்சனை பற்றி சகோதரியிடம் புரணி பேசியதால் ஆத்திரம் அடைந்த கணவன்,

“கள்ளச்சாராயத்தை ஒழிக்க சிறப்பு தேடுதல் வேட்டை” அதிரடி காட்டும் டிஜிபி சைலேந்தர் பாபு

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்படும் என டிஜிபி சைலேந்தர் பாபு

Latest News

Big Stories