“நெஞ்சில் தைரியம் இருந்தால் என்னை கரூருக்கு வந்து தொட்டுப் பாருங்கள்” என திமுக அமைச்சருக்கு சவால் விட்ட அண்ணாமலை | காரணம் என்ன ?

நெஞ்சில் தைரியம் இருந்தால் என்னை கரூருக்கு வந்து தொட்டுப் பாருங்கள் என திமுக அமைச்சருக்கு சவால் விட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

நேற்று அண்ணாமலை அவர்கள் மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை 9 ரூபாய் மற்றும் 6 ரூபாய் என முறையை குறைத்தது. அதன்படி திமுக அரசும் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியது போல ஐந்து ரூபாய் பெட்ரோலுக்கு குறைக்க வேண்டும் அடுத்த 72 மணி நேரத்தில் இது நடக்கவில்லை என்றால் நாங்கள் கோட்டையை முற்றுகை இடுவோம் என சவால் விட்டிருந்தார். இதனால் அரசியல் களமே சற்று ஆடிப்போனது.

இதற்க்கு பதிலளிக்கும் வகையில் நேற்று ஓராண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் தேசிய வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேசினார் : – “72 மணி நேரத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வில்லை எனில் கோட்டையை முற்றுகையிடுவோம். என்று அண்ணாமலை கூறியுள்ளார். அவ்வளவு தைரியம் இருக்கா ? பார்க்கலாமா ? இது திமுக ஆட்சி… சொன்னதை செய்து காட்டியவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின். உங்களது மிரட்டலுக்கு திமுக அஞ்சாது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால்விட என்ன தகுதி இருக்கிறது. அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தை அவர் தாண்ட முடியாது” என பகிரங்கமாக சவால் விட்டிருக்கிரார்.

அம்மா உணவகத்தில் கிடைக்கும் பூரி, வடை, ஆம்ப்லேட் | திமுக கவுன்சிலர் உணவகமாக மாறிய கொடுமை

இதற்கு பதிலளித்த பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், “திமுக ஆட்சியில் ரவுடிகள் தான் அமைச்சர்களாக இருக்கின்றனர் என்பதற்கு இதை விட ஒரு பெரிய உதாரணம் தேவையில்லை. அவர் என்னை ரவுடி போல மிரட்டுகிறார். என்ன ஒரு தைரியம் வேண்டும் அப்படி பேச ? என்னை கரூரை தாண்ட விட மாட்டாராம்… இவர் என்ன barricade போட்டு தடுக்கும் செக்யூரிட்டி வேலை பார்க்கிறாரா ? அமைச்சரோ, அவரோடு எப்போதும் இருக்கும் அடியாட்கலோ, ரவுடிகலோ, நெஞ்சில் தைரியம் இருந்தால் கரூர் வந்து என்னை தடுத்து பார்க்கட்டும் அதன் பின் என்ன நடக்கிறது என்பது தெரியும்” எனக் கூறினார்.

“தமிழகத்தில் தற்போது இருப்பது பழைய பாஜக என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அமைச்சரே கொஞ்சம் பார்த்துப் பேசுங்கள்” என அண்ணாமலை எச்சரித்திருக்கிறார். தற்போது இந்த காரசாரமான பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Spread the love

Related Posts

உலகிலேயே பெரிய இந்து கோயில் கட்ட முஸ்லிம் குடும்பத்தினர் 2.5 கோடி நிலத்தை நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

உலகிலேயே பெரிய இந்து கோயில் கட்ட முஸ்லிம் குடும்பத்தினர் 2.5 கோடி நிலத்தை நன்கொடையாக வழங்கி

முதல்வருக்கு கிறித்துவ மதம் தொடர்பான புத்தகத்தை பரிசளித்து பாஜகவினரிடம் வெறுப்பை பெற்ற கலெக்டர்

புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு அவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கிறிஸ்தவம் தொடர்பான புத்தகத்தை பரிசாக அளித்ததால்

கருப்பு நிற உடையில் கவர்ச்சி விருந்தளித்திருக்கும் நடிகை பூனம் பஜ்வா | மேலும் புகைப்படங்கள் உள்ளே

நடிகை பூனம் பஜ்வா கருப்பு நிற உடையில் இருக்கும் கவர்ச்சி போட்டோக்களை அவரின் இன்ஸ்ட்டா பக்கத்தில்

x