யுவன் சங்கர் ராஜா கருப்பு திராவிடன் என்று காப்ஷன் போட்டு பதிவிட்டிருந்த இன்ஸ்டா போஸ்டுக்கு திரு அண்ணாமலை அவர்கள் நான் அவரைவிட அண்டங்காக்கா கருப்பு என்று அவரை அவரே கலாய்த்துக் கொண்டு பேசியுள்ளார்.
கடந்த 4 நாட்களாக இளையராஜாவின் பாடு பெரும்பாடாக இருக்கிறது. அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தக விழாவின் முன்னுரையும் எழுதி அந்த புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட திரு இளையராஜா அவர்கள் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு “இருவரும் நிகரானவர்கள் மோடி ஆட்சி செய்யும் இந்த காலத்தில் அம்பேத்கர் இருந்திருந்தால் அம்பேத்கர் மோடியின் ஆளுமை திறமையை பார்த்து பாராட்டி இருப்பார் என்று கூறியிருந்தார். இது சில திராவிட இயக்கங்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
ஏன் இவர் இப்படி கூறுகிறார் பாஜகவுக்கு சொம்பு அடிக்கிறாரா என்றெல்லாம் இணையவாசிகள் கலாய்த்து பதிவு செய்தனர். அதன் பிறகு இன்று இளையராஜாவின் மகனான யுவன்சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருப்பு திராவிடன் என்று தன் அப்பாவிற்கு பதிலடி கொடுப்பது போல திராவிடம் பற்றிய ஒரு போஸ்ட்டை கருப்பு வேட்டி மற்றும் கருப்பு சட்டையுடன் அந்த போட்டோவை கிளிக் செய்து பதிவிட்டிருக்கிறார். இது மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியது.
இந்த வெயில் காலத்தில் உடல் சூட்டை தடுக்க என்ன வழி

இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- “தன்னை திராவிட கருப்பர் என்று கூறுகிறார் யுவன், நான் அவரைவிட அண்டங்காக்கா கருப்பு அதனால் இதை இத்தோடு விட்டு விடுங்கள், அவர் ஏதோ கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து இருக்கிறார் இதை ஏன் பெருசு படுத்துகிறீர்கள்” என்று அந்த விஷயத்தை பூசி மொழுவிவிட்டார். மேலும் அவர் பேசுகையில் “இளையராஜா அவர்களுக்கு பாரத ரத்னா விருதை அளிக்க வேண்டும் இது குறித்து மத்திய அரசுக்கு நான் கடிதம் எழுதவும் தயார்” என கூறியிருக்கிறார் அண்ணாமலை.
