அமைச்சர் செந்தில் பாலாஜியே உங்கள் கைதுக்கு கொஞ்சம் பொறுமையாக இருங்கள், அமலாக்கத்துறை வேறு விஷயத்தில் பிஸியாக உள்ளனர் என அண்ணாமலை கூறியதற்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி.
திமுக ஆட்சி அமைத்துள்ளதிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுக அமைச்சர்கள் மேலும் திமுக மேலும் சாடி வருகிறார். திமுக அமைச்சர்கள் எதிராக புகார் கூறுவது திமுக மேல புகார் கூறுவது, குறிப்பாக மின்சாரத் துறை அமைச்சரை வம்பு இழுப்பது பல்வேறு குற்றச்சாட்டு புகார்களை அவர் மீது சுமத்துவது என இப்படியான காரியங்களை செய்து வருகிறார்.

ஆனால் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கும் சலிக்காமல் அமைச்சர் செந்தில் பாலாஜியும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார். இந்த வகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை மின்துறை ஊழல் நடைபெறுவதாக நாங்கள் சொன்ன புகாருக்கு நீதிமன்றம் செல்லுமாறு செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். எங்களுடைய ஆட்சியில் நீதி கிடைக்காது என தவறு செய்துள்ளதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. திமுக அமைச்சர்கள் மீது ஆளுநர் அலுவலகத்தில் கொடுத்த புகார் விசாரணையில் இருக்கிறது. அவர்கள் கொஞ்சம் ஃப்ரீ ஆகிட்டு வரட்டும் இதை கவனிக்க வருவாங்க என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அண்ணாமலை எப்போது அமலாக்கத்துறை இயக்குனர் ஆனார் ? உத்தரவு போடும் அளவிற்கு மத்திய நிதி அமைச்சராக இருக்கிறாரா ? 24 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்அவரை தேர்தலில் தோற்கடித்து வெளியூருக்கு துரத்தி விட்டு விவிட்டார்கள் ஊர் பக்கமே அவரை பார்க்க முடியவில்லை. அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு எந்த அளவிற்கு பயன்படுத்துகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக அண்ணாமலை மூலம் நமக்கு தெரிகிறது.
எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்த அண்ணாமலை கையில் எந்த காகிதமும் இல்லை, மண்டையில் மூளையும் இல்லை, வேலை வெட்டி இல்லாமல் பேசி வருகிறார். என்னுடைய நேரத்தையும் வீணடிக்கிறார் என கடுமையாக சாடியுள்ளார்.
