சொன்னீங்களே… செஞ்சீங்களா ?? வழக்கம் போல திமுகவை வறுத்தெடுக்கும் அண்ணாமலை | ஆனா இந்த வாட்டி ஒரு புதிய யுக்தி

எம்ஜிஆர் அவர்களின் பாடல் ஒன்றை குறிப்பிட்டு திமுகவை படு கேவலமாக விமர்சித்திருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் பேசியதாவது :- “இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார். சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாடிய பாடல் இன்று நடக்கும் திமுக அரசியலுக்கு மிக துல்லியமாக பொருந்தும். தமிழகத்தில் இந்த ஓராண்டு காலமாக எந்த வித புதிய வளர்ச்சி திட்டங்களும் இல்லாமல் வணிகம் தொழில் மேம்பாடு இல்லாமல் தொலைநோக்கப் பார்வை இல்லாமல் வெறும் சுய விளம்பரத்திற்காகவே நடந்து வருகிறது.

மேலும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு எல்லாம் தமிழக லேபில் ஒட்டி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. மக்கள் படும் துன்பங்களை எடுத்துரைக்க பாஜக சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. திமுகவின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்துவிட்டு தற்போது பெருத்த ஏமாற்றம் அடைந்து விட்டனர் மக்கள். தமிழக மக்களின் பாதிப்புகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்பட இருக்கிறது. தமிழகம் முழுவதும் பாஜகவின் மாவட்டங்கள் 60லும் இது நடைபெறும் சென்னையில் உள்ள ஏழு மாவட்டங்களும் ஒன்றாக இணைந்து வள்ளுவர் கோட்டம் பகுதியில் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

“முதலமைச்சருக்கு ரம்ஜான், கிறித்துமஸ்க்கு மட்டும் வாழ்த்து சொல்ல நேரமிருக்கு ஆனா தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல நேரமில்லை” – ஸ்டாலினை சீண்டிய தமிழிசை

காவல்துறையில் ஏகப்பட்ட லாக்கப் மரணங்கள் நடக்கிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பெரிதாகி உள்ளது. கல்வித்துறையில் தொலைநோக்க பார்வை ஒன்றே தொடர்ந்து குழப்பமான நடைமுறைகளில் நடந்து வருகிறது. மொழியையும் மதத்தையும் இனத்தையும் சாதியை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்தும் வகையில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை திட்டமிட்டு எதிர்க்கும் திமுகவின் தொடர் நடவடிக்கைகள், தொழில் வணிகத் துறையில் தொடர் எதிர்வினைகள், விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல் அவர்களை கைவிட்ட நிலையில் வைத்திருப்பது. இந்த திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை ஒன்று கூட நிறைவேற்றவில்லை பெண்களுக்கு நகை கடன் தள்ளுபடி கேஸ் சிலிண்டர் தருவதாக சொன்ன மானியம், பெட்ரோல் டீசல் விலை, கல்வி கடன், நீட் தேர்வு ரத்து இப்படி பல விஷயங்களை சொன்னது சொன்னது போலவே இருக்கிறது எதையும் உருப்படியாக செய்யவில்லை.

ஏனென்றால் அவர்களால் செய்ய முடியாது பாமர மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க மட்டும்தான் அவர்களுக்கு தெரியும். வெறும் அறிக்கை அரசியலை மட்டும் வளர்த்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையான மக்கள் துன்பத்தை பற்றி ஒருவருக்கும் அக்கறை இல்லை. மேலும் தமிழகம் தழுவிய திமுக ஆட்சிக்கு எதிரான போராட்டம் மக்கள் சக்தியை ஒன்று திரட்டி மக்கள் நலனுக்காக நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் அனைவரும் பங்கு பெற்று ஆதரவளிக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

“நான் வேண்டுமென்றே தான் திராவிட மாடல் என்று சொல்லி வருகிறேன்” – முதல்வர் ஸ்டாலின்

Spread the love

Related Posts

“திமுக கட்சிக்காரர்கள் மணல் அள்ளட்டும் ….” – திமுக எம்பி ராஜேஷ்குமார் பேசிய சர்ச்சை வீடியோ லீக்

“தனது கட்சிக்காரர்கள் மணல் அல்லட்டும் என சொன்னவன் நான்தான்” என்று திமுக எம்பி ராஜேஷ் குமார்

திருமணமான பெண்கள் அதிகமாக இணையத்தில் தேடும் விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி கூகுள் அதிரடி ரிப்போர்ட்டை வெளியிட்டு இருக்கிறது

திருமணமான பெண்கள் அதிகமாக இணையதளத்தில் தேடும் விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி கூகுள் தற்போது வெளியிட்டு

சற்றுமுன் :- அந்தமானில் 5 முறை நிலநடுக்கம் | சுனாமி எச்சரிக்கை விடுத்த நிபுணர்கள்

அந்தமான் அருகே அடுத்தடுத்து ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுனாமி ஏற்படும் அபாயம்