நரிக்குறவர் பெண்கள் கையில் குழந்தையுடன் தரையில் அமர்ந்து இருக்கிறார்கள் அரசு அலுவலகத்தில். திராவிட மாடலா ஆட்சியில் கடைபிடிக்கப்படும் பாகுபாடு இதுதான என மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சுமார் 100 நன்றிகூறவர் சமுதாயம் குடும்பம் மனு கொடுப்பதற்காக மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்திருக்கிறார்கள். அவர்களை தரையில் அமரச் செய்தனர். அதில் ஒரு அம்மா குழந்தையும் வைத்துள்ளார் அதையும் பொருட்படுத்தாமல் அரசு அலுவலகத்தில் இப்படி நடந்திருக்கின்றன. இப்படித்தான் ஒரு அரசு அலுவலகத்தில் கடைபிடிக்கப்படுகிறதா ? இந்த பாகுபாடு திராவிடம் மாடல் என்று சொல்லிக் கொள்ளும் ஆளும் கட்சியின் சமூக நீதி கோட்பாட்டை கேள்விக்குறியாக வைக்கிறது.

மேலும் பேசிய அவர் ஜாதிகள் இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திராவிடம் மாடல் ஆட்சியில் இந்த சாதி பாகுபாடு திமுகவின் போலி முகத்தை வெளியே காட்டுகிறது. மேலும் தமிழக முதலமைச்சர் நரிக்குறவர் வீட்டிற்கு சென்றார் அங்கு அவருக்கென புத்தம் புதிய தட்டிலேயே எடுத்துவரப்பட்ட சாப்பாடு பரிமாறப்பட்டது. மேலும் தாம்லேரில் மின்னல் வாட்டர் தான் கொடுக்கப்பட்டது. திடீரென்று வீட்டிக்கு வந்த முதலவரை திறமையாக போட்டோ படம் எடுத்து நரிக்குறவர் வீட்டில் உணவு அருந்தியது போல் விளம்பரப்படுத்தி கொள்கிறார். சமூக நீதியை விளம்பரத்திற்காக பயன்படுத்தும் இவர்களின் சமூக நீதி இவர்களின் உள்ளத்தில் இருக்கும் உண்மையான சமூக நீதியை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரியவந்திருக்கிறது.
மேலும் சமூக நீதி, சாதி மதம் மறுப்பு என பேசி வரும் மண் தமிழ் மன்னன் என்ற தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திராவிடம் மாடல் ஆட்சியில் பழங்குடியின மக்களுக்கு ஒரு சாதாரண நாற்காலி போடகூட மனம் இல்லையா ? ஆனால் இவர் தன்னை சமூக நீதி பாதுகாவலர் கூறிக் கொள்கிறார்.

ஆனால் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பழங்குடி இனத்தின் மலை வாழ் மங்கைக்கு சாதாரண நாற்காலி அல்ல ஜனாதிபதியின் நாற்காலியை கொடுத்து கௌரவ படுத்தினார். இப்போது சொல்லுங்கள் திராவிட மாடலில் உதட்டில் மின்னுகிறது சமூகநீதி. பாஜகவிற்கு உள்ளத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது சமூகநீதி. இது முதல் முறை தெரியாமல் நடந்த சம்பவம் என்று சொன்னால் கூட தவறில்லை. ஆனால் இதுபோன்ற சம்பவம் பலமுறை நடந்திருக்கிறது என்று அந்த சம்பவங்களை எடுத்துரைத்து திமுகவில் சரமாரியாக கேள்வி எழுப்பினார் அண்ணாமலை.
மேலும் பேசிய அவர் திராவிட மாடல் எப்படி தமிழ் மொழி அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுகிறதோ, அதேபோல் சமூக நீதியும் ஓட்டுகளை வாங்குவதற்காக திமுகவிற்கு நல்ல கருவியாக பயன்படுகிறது என கூறியுள்ளார்.