“நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறவேண்டும்” ஆதீனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவல் கேட்டுள்ளார் அர்ஜுன் சம்பத்

நடிகர் விஜய் அவர்கள் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என ஆதீனம் விவகாரத்தில் பேசியிருக்கிறார் அர்ஜுன் சம்பத்.

மதுரை ஆதீனம் அவர்கள் நடிகர் விஜய் ஹிந்து கடவுளுக்கு எதிரானவர் என்று பேசியிருந்தார் அதனால் ஆத்திரமடைந்த மதுரை விஜய் ரசிகர்கள் மதுரை ஆதீனத்துக்கு எதிராக ஒரு போஸ்டரை ஒட்டினார்கள். அதில் மிகவும் கொச்சையான வார்த்தைகளால் மதுரை ஆதினத்தின் எதிராக அந்த போஸ்டரில் வாசகங்களைக் கொண்டிருந்தன. இதனால் மதுரை ஆதீனத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது என்று மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மனு அளித்துள்ளார்.

“மதுரை ஆதீனத்தை மிரட்டினால், திமுகவில் ஒருத்தர் கூட இருக்க மாட்டீர்கள்” மேடையில் திமுகவுக்கு பயத்தை காட்டிய எச்.ராஜா

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் :- “அரசியல் பிரமுகர்களும், சினிமா ரசிகர்களும் மதுரை ஆதீனத்திற்கு அச்சுறுத்தல் தருகின்றனர். மதுரை ஆதீனம் அரசியல்வாதி போல் நடந்து கொள்கிறார், நாங்கள் அவர் மேல் பாய்ந்து விடுவோம் என நேரடியாக அபாயகரமாக பேசுகிறார் அமைச்சர். சிதம்பரம் நடராஜப் பெருமானை இழிவுபடுத்தியவர்களை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது மதுரை ஆதீனத்தை குறைகூற மட்டும் வருகிறார்கள் அமைச்சர்கள்” என்றார்.

மேலும் மதுரை ஆதீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தால் நாங்கள் அதிமுக பாஜக ஆதரவாளர்கள் என்று கூறுகின்றனர். அப்படி எல்லாம் கிடையாது. விஜய் ரசிகர்கள் ஆதீனத்தின் மீது தனிப்பட்ட கருத்துக்களை கூறுகின்றனர். தாய் தகப்பனை விட சினிமா நடிகர் ஒன்றும் சிறந்தவர் அல்ல. அதனால் தன் ரசிகர்களுக்கு விஜய் அவர்கள் அறிவுரை கூற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் பேசிய அவர் “கிறிஸ்தவர்களிடம் தேவாலயம் சொத்துக்கள் இருக்கின்றது, முஸ்லிமின் சொத்துக்கள் முஸ்லிம்களிடம் இருக்கிறது, அப்படி என்றால் இந்துக்கள் சொட்டு மட்டும் ஏன் அரசிடம் இருக்கவேண்டும் ? அந்த உரிமையை தான் நாங்கள் கேட்கிறோம்” என்று ஆதீனத்திற்கு ஆதரவாக அவர் பேசி இருந்தார். மேலும் ஆதீனத்திற்கு துப்பாக்கி எந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் அப்படி மாநில அரசு அது கொடுக்கத் தவறினால் நாங்கள் மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளார்.

Spread the love

Related Posts

என் புருஷன் எதையுமே கண்டுக்கமாட்டான்… நித்தி சிஷ்யை நடிகை ரஞ்சிதா ஆதங்கம்

நித்தியானந்தாவுடன் கிசுகிசுக்கப்படாமல் நடிகை ரஞ்சிதா இருந்ததே இல்லை குறிப்பாக கைலாச அதிபர் நித்யானந்தாவின் பெயர் எப்போதெல்லாம்

Viral Video | உயர்சாதி பிரிவினரின் கால்களை நக்கும் தலித் சிறுவன் | உத்திர பிரதேசத்தில் அரங்கேறிய கொடுமை | விடியோவை பார்க்க பாவமா இருக்கு

உத்தரப்பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயர்சாதி பிரிவினரின் கட்டளையின் பெயரில் அவர்களின் காலை நக்கும்

“ஆம்னி பேருந்து கட்டணம் ஏழை எளிய மக்களை பாதிக்கவில்லை” – அமைச்சர் சிவசங்கர்

ஆம்னி பேருந்து கட்டணம் ஏழை எளிய மக்களை பாதிக்கவில்லை என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். தீபாவளி