நடிகர் விவேக் உடைய மறைவு மிகப்பெரிய இழப்பு என உருக்கமாக பதிவிட்டு ஏ ஆர் ரகுமான் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நகைச்சுவையாளர் தான் விவேக். இவர் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார். அவரது மறைவை இன்றளவும் தமிழ் சினிமா ஏற்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. ஏனென்றால் இவர் அப்படிப்பட்ட ஒரு நகைச்சுவை கலைஞர். வடிவேலுவை விட ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் விவேக்.

இந்த நிலையில் ட்விட்டர் பயனாளர் ஒருவர் விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் வரும் ஒரு காட்சியை பதிவிட்டிருந்தார். அதில் விஜயகாந்த் விவேக் நேரில் சென்று பார்ப்பது போல அந்த காட்சி இருக்கும். அந்த வீடியோவை பார்த்ததும் எமோஷன் ஆன ஏ.ஆர் ரகுமான் நடிகர் விவேக்கின் மறைவு மிகப்பெரிய இழப்பு என உருக்கமாக பதிவு செய்துள்ளார். இது தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.
