நேற்று பாகிஸ்தானிடம் நடந்த போட்டியில் பரபரப்பான கட்டத்தில் முக்கியமான கேட்சை தவறவிட்ட அர்ஷிதீப் சிங்கை தற்போது இணையதள வாசிகள் காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர் என அவதூறு பரப்பி செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட்டில் தற்போது வளர்ந்து வரும் ஒரு இளம் வீரராக இருப்பவர்தான் அர்ஷதிப் சிங். தன்னுடைய அசாத்திய பவுலிங் திறமையால் ஐபிஎல் போட்டியில் கலக்கிய இவரை இந்திய அணியில் அப்படியே தூக்கிக் கொண்டு வந்து சேர்த்தார் ராகுல் டிராவிட். முதல் ஒரு சில போட்டிகளில் நன்றாக பந்து வீசிய இவரை பலரும் பாராட்டி வந்தனர். மேலும் டெத் ஓவர்கள் என்றாலே இவரிடம் பந்தை கொடுத்து விடலாம் என்பதைப் போல தனது நல்ல பவுலிங் வெளிப்படுத்தினார்.

அர்ஷிதீப் சிங் கடைசி நேரங்களில் யார்க்கர் போட்டு பேட்ஸ்மேன்களை திக்கு முக்காடு செய்யும் வல்லமை பெற்றவர். நேற்று நடந்த பரபரப்பான பாகிஸ்தான் போட்டியின் இடையில் முக்கியமான நேரத்தில் ஒரு கேட்சை தவறவிட்டார் அர்ஷிதீப் சிங். அது ஒரு கஷ்டமான கேட்ச் என்றும் சொல்ல முடியாது மிகவும் எளிதான ஒரு கேட்சை தனது மெத்தன போக்கால் தவறவிட்டார் அர்ஷிதீப் சிங் அதனால் ஆட்டமே தலைகீழாக மாறி பாக்கிஸ்தான் வெற்றி பெற்றது. இதனால் இப்படி ஈஸியான கேட்சை தவிற விடுகிறாரே என்று அவரை ட்விட்டர் பக்கத்தில் காலிஸ்தான் அமைப்பை சேர்ந்தவர் என வன்மத்தை கொட்டி தீர்த்து வந்தனர்.
“இது எனக்கு தேவ தான்…. யாருமே எனக்கு செய்யாத ஒரு விஷயத்த, டோனி செஞ்சிட்டாரு …” பாகிஸ்தானிடம் தோல்விக்கு பிறகு உருக்கமாக பேட்டியளித்த கோலி
காலிஸ்தான் என்றால் இந்தியாவில் இருக்கும் பஞ்சாப் சீக்கியர்களும் அதேபோல் பாகிஸ்தானில் வசிக்கும் பஞ்சாப் சீக்கியர்களும் இணைந்து ஒரு தனி நாடு வேண்டும் என்ற நோக்கத்தில் தொடரப்பட்ட ஒரு இயக்கம் தான் அந்த காலிஸ்தானியக்கம். இந்த இயக்கத்தை சேர்ந்தவர் தான் அர்ஷிதீப் சிங் என அவரைப் பற்றி மிகவும் அவதூறு பரப்பினர். மேலும் பிரபல இணையதளமான விக்கிபீடியாவில் அவரைப் பற்றி தேடும் போது அவர் காலிஸ்தான்காக விளையாடினார். காலிஸ்தான் அணிக்காக முதல் போட்டியில் பங்கேற்றார் என மிகவும் மோசமான வார்த்தைகளை வைத்து அதில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பெரிதானதும் அதனை உற்று நோக்கி உடனே அந்த இணையதளம் அதனை நீக்கியும் உள்ளது. இருந்தாலும் அது வேகமாக பரவியதால் விக்கிபீடியா நிறுவனத்தின் இந்திய அதிகாரிகள் இதை பற்றின விளக்கத்தை நேரில் வந்து ஆஜராகி தெரிவிக்க வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தற்போது இந்த சம்பவம் மிகவும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
