அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி, மதுபாலா மற்றும் காளிவெங்கட் போன்றவர்கள் நடித்த இன்று திரைக்கு வந்திருக்கும் படம் தான் தேஜாவு.
நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்து அதை கதையாக எழுதுகிறார் ஒரு நாவல் ஆசிரியர். அந்த நாவலாசிரியர் எழுதுவது எப்படி நடக்கிறது என மண்டை பிதுங்கி அதை இன்வெஸ்டிகேஷன் செய்யும் போலீஸ் குழு. கடைசியில் இவர் எழுதுவது எப்படி உண்மையாகிறது என கண்டுபிடித்து போலீஸ் அதற்கு எப்படி தீர்வு காண்கிறார்கள் என்பதுதான் முழு கதை.
முதலில் படத்தின் பாசிட்டிவ் என்று சொன்னால் பிஜிம் சொல்லலாம். ஏனென்றால் படத்தை தாங்கி பிடிக்க இசை தான் ஆணி வேராக இருக்கிறது. நார்மல் காட்சிகளையும் இசை தூக்கி பிடித்து காட்டுகிறது. உண்மையிலேயே ஜிப்ரானின் இசை படத்திற்கு கூடுதல் பலம். படத்தில் நடித்த எல்லா நடிகர் நடிகையர் நடிப்பும் கச்சிதம். இன்னும் ஒரு சில இடங்களில் மெனக்கெட்டு இருந்தால் நல்ல நடிப்பை எதிர்பார்த்து இருக்கலாம்.

அதே போல் தான் கதையும். முதல் பாதியில் கதையை ஜெட் வேகத்தில் நகர்த்துகிறார் இயக்குனர். அனால் இரண்டாம் பாதியில் அந்த ஜெட் வேகம் இல்லை என்றாலும் ஒரு நல்ல திரில்லராக நகர்கிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது ஒரு நல்ல திரில்லர் படம் பார்த்து திருப்தியை அளிக்கும் இந்த தேஜாவு.
படத்தில் ஆங்காங்கே வரும் ட்விஸ்ட்கள் சிலது எதிர்பார்க்கக் கூடியவைகளாகவும் சிலது எதிர்பார்க்க முடியாதவையாகவும் இருக்கிறது. இன்னும் ஒரு சில இடங்களில் கொஞ்சம் திரைக்கதை நன்றாக எழுதி அதை இயக்கி இருந்தால் இந்த படம் ஒரு வேற லெவல் திரில்லர் படமாக வந்திருக்கும். ஆனாலும் இந்த படத்தை தற்போது திரையரங்குகளில் நிச்சயம் பார்க்கலாம். படத்தின் மைய கதையிலிருந்து எங்கேயும் படம் நகரவில்லை ஒரே நேர்கோட்டில் பயணித்து நமக்கும் ஒரு சீட் எட்ஜ் திரில்லர் அனுபவத்தை படம் அளிக்கிறது. அருள் நிதியின் கதை தேர்வு மற்றும் ஒரு முறை சரியாக அமைந்திருக்கிறது.
