அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை :- திரைப்படம் பார்த்து தான் திருடினேன், வலிமை பட வசனத்தை வாட்சப் ஸ்டேட்டஸ் ஆகா வைத்திருந்த கொள்ளையர்

அரும்பாக்கத்தில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட நபர், நான் திரைப்படங்களை பார்த்து தான் வியந்து இப்படி வங்கிக் கொள்ளைக்கு திட்டம் போட்டேன் என பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

கடந்த 13 ஆம் தேதியில் அரும்பாக்கம் பெடரல் வங்கியில் கொலை சம்பவம் ஒன்று அரங்கேறியது. அப்போது வந்து கொள்ளைக்காரன் அந்த வங்கியிலேயே 2 ஆண்டுகள் பனி புரிந்தவர் ஆவர். ஊழியர்களிடம் கத்தி காட்டி மிரட்டி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து 32 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்தார். மேலும் வங்கியில் இருந்தவர்களை வாயில் தீனி வைத்து காய் கால்களை கட்டி விட்டு சென்றான்.

Viral Video | உத்திரபிரதேசத்தில் நாயை விரட்டியதற்காக வாட்ச்மேனை பிரம்பால் அடித்த பெண்ணின் வீடியோ வேகமாக பரவி வருகிறது

பட்ட பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கும்பலைப் பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டது அதில் முக்கிய குற்றவாளி முருகன் உட்பட கைது செய்தனர் மூன்று நாட்களில் 31.7 கிலோ தங்க நகைகளை மீட்டு உள்ளனர். மேலும் நகைகளை உருக்கி தருவது தொடர்பாக பேரம் பேசிய கோவை நகை வியாபாரியின் உறவினர் விசாரணை நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் முக்கிய குற்றவாளி முருகனிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்த போது எனக்கு பல்வேறு திரைப்படங்களை பார்த்து தான் கொள்ளையடிக்க ஆர்வமாக இருந்தது எனவும் அந்த இடத்தில் நான் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில் அங்கு தங்க நகைகள் வைக்கப்பட்டிருக்கும் இடம் குறித்து தெரிந்து கொண்டேன்.

அதன் பின்னர் நான் என் நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் போட்டேன் நான் ஜென்டில்மேன் படத்தை பத்து முறை பார்த்திருப்பேன். அந்த படம் தான் என்னை கொள்ளையடிப்பதற்கு ஊக்கப்படுத்தியது. மேலும் வங்கியில் எப்படி கொள்ளையடிப்பது என்று தெரிந்து கொண்டேன். சிக்காமல் எப்படி தப்பிப்பது என்று நண்பர்கள்டன் இணைந்து ஒரு மாதம் ரகசிய திட்டம் போட்டோம். கொள்ளையடிக்கும் தேவையான கார் பைக்குகள் நண்பர்களிடமிருந்து வாங்கினேன். அரும்பாக்கம் வங்கியை தவிர மற்ற வங்கிகளும் கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்தோம் என கூறினார். மேலும் வலிமை படத்தில் வரும் வசனத்தையும் அவர் கொள்ளை அடிப்பதற்கு முன்பாக whatsapp ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்தனர் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.

Spread the love

Related Posts

“இப்போ இப்டி கேப்பிங்க அப்பறோம் ஆணுறை கேப்பிங்க….” சானிட்டரி நாப்கின் விலை குறைக்க சொன்ன மாணவியிடம் சர்ச்சையாக பேசிய பெண் அரசு அதிகாரி

பாட்னாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் மாணவியிடம் ஆணுறை பற்றி பேசி சர்ச்சையை கிளப்பி உள்ளார் ஒரு

என் புருஷன் எதையுமே கண்டுக்கமாட்டான்… நித்தி சிஷ்யை நடிகை ரஞ்சிதா ஆதங்கம்

நித்தியானந்தாவுடன் கிசுகிசுக்கப்படாமல் நடிகை ரஞ்சிதா இருந்ததே இல்லை குறிப்பாக கைலாச அதிபர் நித்யானந்தாவின் பெயர் எப்போதெல்லாம்

உடனடியாக உக்ரைனிலிருந்து இந்தியர்கள் வெளியேறுங்கள் | இந்திய அரசு வெளியிட்ட பரபரப்பு ரிப்போர்ட்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் தற்போது போர் நடக்கவிருக்கும் காரணத்தால் இந்தியர்களை அங்கிருந்து வெளியேறும்படி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்