வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக்செல்வன், சம்யுக்தா நடிப்பில் ஏப்ரல் 1ம் தேதி திரையில் வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் மன்மதலீலை. இந்த படத்துக்கு பிரேம்ஜி தான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் அசோக்செல்வன் பேசியபோது வெங்கட் பிரபு அவர்களின் திரைப்படம் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். தற்போது அவருடனே நான் பணிபுரிவது கனவு நினைவானது போன்று நினைக்க தோன்றுகிறது. இந்த படத்தை அவர் வேகமாக எடுத்து முடிந்து விட்டார் மிகவும் குறுகிய நாட்கள் தான் அந்த படத்திற்கு நாங்கள் சூட் செய்தோம்” என்றார்.
மேலும் பேசிய அவர் “அதுக்கு நடுவுல எனக்கு கொரோனாலாம் வந்தது, அந்த டைம்ல தான் இந்த லிப் கிஸ் சீன் எல்லாம் எடுத்தாங்க கொரோன ஓட நடிச்சாலும் ஹீரோயின்களுக்கு எதுவுமே ஆகல. டீசர் ரிலீஸ் ஆனதும் ஏன் இந்த மாதிரி படம் பண்றீங்கன்னு கேட்டாங்க ஆனா எனக்கு கதை பிடித்திருந்தது. அதனால் இதில் எந்தவிதமான தவறும் எனக்குத் தெரியவில்லை. அந்த காரணத்தினால் தான் நடித்தேன், படத்தில் சொன்னது போல எல்லா ஆண்களும் மாட்டிகொள்ளாதவரை ராமர்களே….. இப்படிக்கு மாட்டிக் கொண்டவர். இந்த வாக்கியத்தை போல தான் இந்தப் படம் இருக்கும் இது முழுக்க முழுக்க ஒரு காமெடி படம்தான். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த வெங்கட் பிரபுவிற்கு மிக்க நன்றி” இவ்வாறு அவர் பேசினார்.