மைத்தனத்தில் அடித்து கொண்ட பாகிஸ்தான், அப்கானிஸ்தான் ரசிகர்கள் | வைரல் வீடியோ

பரபரப்பான ஆட்டத்தில் நேற்று ஆப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான அணி தோற்கடித்ததும் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சேர்களை தூக்கி அடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆசியக் கோப்பை சூப்பர் போர் ஆட்டம் பரபரப்பு கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் ஸ்ரீலங்கா அணி ஏறத்தாழ பைனலுக்கு சென்று விட்டது. மீதமுள்ள அந்த ஒரு அணி எது என்பதற்காக பல பரிச்சையில் இந்தியா பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளுக்கிடையே கடும் போட்டி நிகழுகிறது. ஸ்ரீலங்கா அணியிடம் தோற்று இந்திய அணி ஏறத்தாழ வெளியாகும் நிலை ஏற்பட்டது. இருந்தாலும் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணி இடம் தோற்றால் இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று கருதப்பட்டது.

பொன்னியின் செல்வன் மேடையில் ஜெயலலிதாவை பற்றி பேசி அரங்கத்தை அதிர வைத்த ரஜினி

அதனால் இந்திய ரசிகர்கள் அனைவரும் நேற்று பாகிஸ்தான் அணி தோற்க வேண்டும் என அந்த ஆட்டத்தை பார்த்தனர். ஆனால் 19 ஓவர் வரை ஆப்கானிஸ்தான் கையில் இருந்த ஆட்டம் கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து பாகிஸ்தான் அணியினர் ஆட்டத்தை தன் வசம் படுத்தினர். இதன் மூலமாக ஸ்ரீலங்கா பாகிஸ்தான் தான் பைனலில் விளையாட போகிறது என உறுதி ஆகிவிட்டது. ஆட்டத்தின் இடையே பாகிஸ்தான் அணியின் ஆசிப் அலிக்கும் அப்கானிஸ்தான் அணியில் இருக்கும் பரீத்க்கும் மோதல் ஏற்பட்டது. இந்த வீடியோவும் பெரிய வைரலானது ஆப்கனிஸ்தான் எப்படியாவது ஜெயித்து விடும் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் அணியினர் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதனால் அந்த மைதானத்தில் சிறிது பதற்றம் ஏற்பட்டது. அதனால் இரு ரசிகர்களுக்கு இடையே மோதலும் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் பாகிஸ்தான் ரசிகர்கள் மீது சேர் கொண்டு எறிந்தனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம். இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி மிகவும் வைரல் ஆகி வருகிறது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே அரசியல் போரும் விளையாட்டுப் போறும் மிக நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. எப்படி இந்தியா பாகிஸ்தான் எதிரி நாடுகளோ அதே போல் தான் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானும் எதிரிகள். தற்போது ஷார்ஜா விளையாட்டு மைதானத்திற்கு இதனால் பல பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. போலீசார் இதற்கு நடவடிக்கை எடுப்பார்களா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Spread the love

Related Posts

படுத்த படுக்கையாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனேவுக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

படப்பிடிப்பின்போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது

நரிக்குறவர் பெண்மணியை தரையில் உட்கார வைத்த அவலம் | மலை வாழ் பெண்ணுக்கு மோடி ஜனாதிபதி இருக்கையை கொடுத்தார் | திமுகவை விளாசிய அண்ணாமலை

நரிக்குறவர் பெண்கள் கையில் குழந்தையுடன் தரையில் அமர்ந்து இருக்கிறார்கள் அரசு அலுவலகத்தில். திராவிட மாடலா ஆட்சியில்

பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு | புதிய கட்டண விவரங்கள் இதோ…

தமிழக அரசு வருகிற மே 18 ஆம் தேதியிலிருந்து பேருந்துக் கட்டணங்களை உயர்த்துகிறது. அதில் எந்தப்