மேஷம் :- நாம் நம்பியவர்கள் ஏமாற்ற கூடும், சில வெளியூர் பயணங்கள் போது சில பொருட்களின் மீது கவனம் ஏற்படும். எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது.

மிதுனம் :- வியாபாரத்தை விரிவுபடுத்த கேட்கப்பட்ட பணம் வருவதற்கு தாமதமாகும். சில அலைச்சல்கள் ஏற்படும்.

சிம்மம் :- தனது வசீகரப் பேச்சால் வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். லாபம் கொட்டும். நினைத்த காரியங்கள் தடை இல்லாமல் இன்று நடக்கும்.

துலாம் :- நிலத்தின் மீது செலுத்தப்பட்ட முதலீடுகள் உயரும். மேலும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். பணம் கையில் விளையாடும்.

தனுசு :- திருமண தொடர்பாக பேச்சுக்கள் கொஞ்சம் தள்ளிப்போகும். வியாபாரம் செழித்திருக்காது. தூக்கத்தை கெடுத்து வேலை பார்ப்பது போல் தோன்றும்.

கும்பம் :- வெளிநாட்டில் ஏற்றுமதி செய்வதன் மூலம் பணம் கையில் சேரும். வெளி ஊர்களில் பல கிளைகளை திறக்க நேரிடும். வெளியூர் செல்லும் பயணங்களும் தடைபடாமல் நடக்கும்.

ரிஷபம் :- உயர் அதிகாரிகள் மரியாதை தருவார்கள். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும் வங்கியிலிருந்து பணம் நிலுவையில் இருந்தால் அதுவும் கிடைக்கும்.

கடகம் :- நிலம் வாங்கி விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம். சில ஆடம்பர செலவுகள் இருக்கும். கூட்டுத் தொழிலில் சில வில்லங்கம் ஏற்படலாம்.

கன்னி :- பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் சில தடைகள் வந்தாலும் அதை கவலைப்படாமல் வாழ்க்கை எதிர்கொண்டால் கடின உழைப்பு உங்களுக்கு கைகொடுக்கும்.

விருச்சிகம் :- வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய பணம் தாமதமானால் அது வந்து சேரும். உற்பத்தியை பெருக்க கடுமையாக உழைக்க வேண்டும் மேலும் ஆன்லைன் பிசினஸ் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மகரம் :- அரசாங்கத்தின் மூலமாக கிடைக்க வேண்டிய பணமும் பலன்களும் தாமதமின்றி வந்து சேரும் உங்களின் எண்ணத்திற்கு குடும்பத்தாரால் இடையூறு ஏற்படாது.

மீனம் :- சிலருக்கு வங்கியிலிருந்து நிதி உதவி கிடைக்கும் நாளாக இருக்கலாம் மாணவர்கள் அதிகம் படிப்பில் அக்கறை காட்டுவார்கள் அரசு பணியாளர்கள் பதவி உயர்வு பெற்று இடமாற்றம் நடக்க வாய்ப்புள்ளது.
