அவிநாசியில் தொடக்கப் பள்ளியில் திமுக கவுன்சிலரின் கணவர் குடிபோதையில் புகுந்து தலைமை ஆசிரியரின் கழுத்தைப் பிடித்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு பின்புறம் உள்ள பாஸ்கர் என்பவரது வீட்டில் இருந்த பள்ளி வளாகத்திற்குள் குப்பை கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு நடந்து வருவதாக குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என பலமுறை தலைமை ஆசிரியர் அவரிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பள்ளிகள் உள்ள செடிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் ஊற்ற சென்றபோது பக்கத்து வீட்டில் இருந்த பாஸ்கர் பள்ளி மாணவர்கள் மீது படும் வகையில் கழிவு நீரை ஊற்றியுள்ளார். இது தொடர்பாக பள்ளியில் விசாரிப்பதற்காக பெற்றோர் வந்துள்ளனர். அப்போது மாணவர்களை தாக்கிய பாஸ்கருக்கு ஆதரவாக அவிநாசி பேரூராட்சி 17 ஆவது வார்டு கவுன்சிலர் ரமணியின் கணவர் துரைசாமி வந்திருந்தார் அப்போது பள்ளி வளாகத்தில் மிகப்பெரிய வாக்குவாதம் நடந்துள்ளது.
அந்த நேரத்தில் தலைமை ஆசிரியர் குறுக்கிட்டு பேச முற்பட்டார். அப்போது ஒரு கட்டத்தில் தலைமை ஆசிரியரின் கழுத்தை இறுக்கிப்பிடித்து தாக்கும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.
