“டேய் சூரி, சோத்துக்கு வழி இல்லாம இருந்த முட்டாள், உனக்கு அவ்ளோ தான் லிமிட், இந்துவா இருந்துட்டு கோவில் பத்தி தப்பா பேசுற…” – சூரியை ஒருமையில் கிழித்த பயில்வான்

விருமன் திரைப்பட விழாவில் கோவில் கட்டுவதை விட, அன்ன சாலை கட்டுவதை விட கல்விச்சாலைகளை பெருக்குவது நல்லது என சூரி பேசியிருந்தார், தற்போது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பயில்வான் ரங்கநாதன் அவர்கள் ஒரு வீடியோவில் பேசியுள்ளார். அதில் மிகவும் ஆவேசமாக பேசி அவர் சூரியை ஒருமையிலும் வாடா, போடா, முட்டாள் என திட்டி இருக்கிறார்.

அவர் அந்த வீடியோவில் பேசுகையில் :- “விருமன் பட விழாவில் எப்படி பேச வேண்டும் என்று தெரியவில்லை, அதாவது ஒருவரை புகழ்ந்து பேசுவது தவறு கிடையாது ஆனால் ஒருவரை புகழ்ந்து பேச மற்றொருவரை இகழ்வது பெரிய தவறு. அதைத்தான் சூரி செய்திருக்கிறார். கோவிலையும் அன்னசாலையையும் ஒப்பிட்டு கல்வி தான் ஒருவருக்கு சிறந்தது என கூறி இருக்கிறார். உண்மையிலேயே கோவில் இல்லை என்றால் நிறைய பேருக்கு இங்கு உண்ண உணவு கிடையாது. அதெல்லாம் உனக்கு தெரியுமா ? கோயில் பற்றி பேச நீ யாருடா முட்டாள். நீயே ஒரு இந்து தானே நீ இப்படி பேசலாமா ?

“என் மேல் தவறு இருப்பது நிரூபித்தால் பாஜகவை விட்டு விலக தயார்” – சின்னத்திரை நடிகை மீது குற்றசாட்டு வைத்த சினேகன்

ஏன் கோயிலை கட்டுவது மட்டும் பேசுற சர்ச் கட்டுவதை பற்றி பேசு மசூதி கட்றத பத்தி பேசு அது என்ன இந்துக்கள் மட்டும் இளிச்சவாயனா ? சாலிகிராமத்தில் சினிமாவிற்கு வருவதற்கு முன்னாடி சோத்துக்கு வழி இல்லாம இருந்தவன் தானே நீ. இப்ப ஓட்டல் எல்லாம் கட்டி பெரிய ஆள் ஆகிவிட்டால் பழசு எல்லாம் மறந்துடுவியா. இப்போ ஆண்டவன் அருளாலே நீ நல்ல இருக்க அதை மறந்துடாத. வெளிநாட்டில் இருந்து யாராவது சுற்றுலா வந்தால் உன்னோட படத்தை யாரும் பார்க்க மாட்டாங்க, உன்னோடு ஸ்டுடியோவை யாரும் பார்க்க மாட்டாங்க, உங்களுடைய கல்விச்சாலையை பற்றி யாரும் பார்க்க மாட்டாங்க.

எல்லாரும் பாக்குறது தஞ்சாவூர் பெரிய கோவிலையும், மதுரை மீனாட்சி கோவிலையும் தான் இந்த மாதிரி கோயில்களுக்கு அவ்வளவு சிறப்பு இருக்கிற தமிழ்நாட்டுல நீ இப்படி பேசலாமா தமிழ்நாட்டின் சின்னமே ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் தாண்டா அதை தெரிஞ்சிக்கோ. படிக்கிறது தான் முக்கியமா ? ஏன் நீ படிச்சிட்டு தன இப்போ நடிகனா ஆகி இவ்ளோ கோடி கோடியா சம்பாரிக்கிறியா? கலைஞர், காமராஜர் படிச்சாங்களா ? அவங்க முதலமைச்சார் ஆகலையா ? படிச்சா தான் அவன் உயர்ந்தவன் நினச்சா நீ தன பெரிய முட்டாள். இதை கூடிய சீக்கிரம் திருத்திக்கிறது நல்லது. இந்த போக்கு தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தா நீ நிறைய கண்டனங்களை சந்திப்ப இதுதான் உனக்கு கடைசி முறையாக இருக்கட்டும்” என அந்த வீடியோவில் எச்சரித்து பேசியுள்ளார்.

Spread the love

Related Posts

கோஹ்லியின் 100வது டெஸ்ட் | மனைவியுடன் சந்தோஷ தருணம்

இந்தியாவுக்கும் ஸ்ரீ லங்காவுக்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கு இருக்கிறது இதில் விராட்

பெண்களின் மார்பகத்தில் சூடு வைத்தல்… இப்படியெல்லாமா தண்டனை குடுத்தாங்க ? | Top 5 பண்டைய கால கொடூர தண்டனைகள்

தண்டனைகள் மிக மோசமாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும் என்பதில் அக்காலங்களில் வாழ்ந்த மக்கள் உறுதியாக

Video Viral | “அதிமுகவை சிலர் வீழ்த்த முயற்சிக்கின்றனர்” OPS-க்கு பதிலடி கொடுக்கிறாரா ? EPS | வீடியோ வைரல்

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் கடந்த ஒரு சில தினங்களாகவே மும்முரமாக