கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளிவராது என தகவல் வந்திருக்கிறது.
தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் நாளை திரையரங்குகளில் வெளிவர காத்திருக்கும் படம்தான் பீஸ்ட் இந்த படத்திற்கு டிக்கெட் முன்பதிவு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்டு தற்போது வெகு விரைவாக டிக்கெட்டுகள் காலியான வண்ணம் உள்ளது.

இந்த நேரத்தில் கரூர் மாநகராட்சியில் பீஸ்ட் படம் வெளிவராது என தெரிவித்து இருக்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திரையரங்குகளில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகாது எனவும், இது தியேட்டர் உரிமையாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்த அறிவிப்பு எனவும் தகவல் வெளிவந்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று இன்னும் அறியப்படவில்லை. ஆனால் கரூர் மாநகராட்சியில் பீஸ்ட் படம் வெளிவராது என்பது அதிகாரப்பூர்வமான தகவலே.
We could not get Beast movie to release in karurcinemas. Sorry for the inconvenience and thanks for understanding.
— Karur Cinemas (@KarurCinemas) April 12, 2022
