பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்கள் கிறிஸ்டியன் மதத்தை ஆதரிக்கிறார் என்ற ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக வேகமாக பேசப்படுகிறது.

நெல்சன் டிலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே போன்றவர்கள் நடித்து ஏப்ரல் 13 ஆம் தேதி திரைக்கு வர காத்திருக்கும் படம் தான் பீஸ்ட். இந்தப்படத்தின் அப்டேட் வெளியாகததை குறித்து தளபதி விஜய் ரசிகர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை கலாய்த்து வருகின்றனர். படம் இன்னும் 10 நாட்களில் ரிலீஸ் ஆகிறது. இன்னும் படத்தின் டீசர் வரவில்லை என சோகத்தில் இருந்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். இந்த நிலையில் நேற்று விஜய் சம்பந்தப்பட்ட ஒரு போஸ்ட்டை ஒரு ரசிகர் போட்டிருந்தார். அதில் விஜய் அவர்கள் மூன்று இடங்களில் கையை ஒரு விதமாக வளைத்து இரண்டு விரல்களை மடித்து இரண்டு விரல்களை நேரே காட்டி, துப்பாக்கி பிடிப்பது போன்று கை பொசிஷனை வைத்திருக்கிறார் விஜய்.
Suma random midnight thoughts about #ThalapathyVijay’s hand gestures in #Beast ✌🏻 pic.twitter.com/9nA4lCEJYP
— KARTHIK DP (@dp_karthik) March 29, 2022
இதைப்பார்த்த பல ரசிகர்களும் விஜய் படத்தில் முழு நேரமும் துப்பாக்கி ஏந்திய கைகளுடன் இருப்பார் என்று தெரிகிறது அதனால் அவருக்கு கையில் துப்பாக்கி இல்லை என்றாலும் அந்த பொசிஷன் அவருக்கு தானாகவே வந்து விடுகிறது என்று பதிவிட்டிருந்தார்கள்.

ஆனால் இன்னொருவர் வித்தியாசமாக யோசித்து ஒரு விஷயத்தை பதிவிட்டிருந்தார். அது என்னவென்றால் இயேசு கிறிஸ்து அவர்களும் அதே போல கையை வைத்து இருப்பது போல பல போட்டோக்களை பதிவிட்டிருந்தார்.
— bravebmi (@bravebmi) March 30, 2022
என்னது “A” படம் பார்த்தா விந்தணு அதிகரிக்குமா ?? செக்ஸ் பற்றின சில அறிவியல் உண்மைகள்
இதைப் பார்த்ததும் இந்த இயேசு கிறிஸ்துவின் ரெபெரன்சை தான் படத்தில் விஜய் வைத்திருக்கிறாரோ என்று கோணத்திலும் யோசிக்க தோன்றுகிறது. இதனால் இது உண்மையிலேயே துப்பாக்கி வைத்திருக்கும் பொசிஷன் தானா ? இல்லை இயேசு கிறிஸ்துவை உருவகப்படுத்தி வைக்கப்பட்ட கை பொசிஷனா ? என்பது தெரியவில்லை. அதனால் பீஸ்ட் படம் கிறிஸ்தவ மதத்தை ஆதரிக்கிறதா ? என்றும் கேள்வி எழும்புகிறது. அனால் இது துப்பாக்கி பிடிப்பதை பற்றி தான் சொல்கிறது என்பது போல தான் நமக்கு தெரிகிறது. படம் வந்தால் தான் நாம் அதை உறுதி படுத்த முடியும்.