“உங்கள நான் ரொம்ப நம்புனேன் நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு….” ராதிகாவிடம் புலம்பும் பாக்கிய

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் வரவேற்பு ஏகோபித்தமாக இருந்து வருகிறது. இது ஆல் டைம் ஃபேவரிட் சீரியலாக ரசிகர்களுக்கு மாறி வருகிறது. அந்த அளவிற்கு இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். இதில் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அதே சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் மலர்கிறது.

இதற்காக இந்த இரண்டு பெண்களிடம் இருந்தும் தப்பித்து ரகசிய வாழ்க்கை வாழ கோபி எவ்வளவோ முயற்சி செய்கிறார் என்பதுதான் திரைகதையாக அமைத்திருக்கின்றனர். இந்த சீரியலில் கோபி ராதிகாவுக்கு இடையான உறவு குறித்து பாக்கியாவிற்கு தெரியவந்தது. அவரை நடு வீட்டில் நிற்க வைத்து கேள்வி கேட்கிறார் பாக்கியா. மேலும் அவர் இதனால் வீட்டை விட்டு வெளியேறியது என இப்படியாக விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் இந்த சீரியல் நகர்கிறது. மேலும் இன்றைய எபிசோடில் நடந்தது என்ன என்பதை பற்றி தான் தற்போது பார்க்க உள்ளோம்.

ராதிகாவை சந்திக்க அவர் வீட்டுக்கு செல்கிறார். பாக்யா அப்போது அவரிடம் ஏன் இப்படி பண்ணீங்க என கேட்கிறார். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக சொல்லுங்கள் எனக் கூறுகிறார் ராதிகா. அதற்கு பதில் அளித்த பாக்யா நீங்கள் கல்யாணம் பண்ணிக்க போறதா சொன்னீங்களே அது யாரு என கேட்கிறார். இதனால் திகைத்துப் போன ராதிகா நிறைய பிரச்சனை ஆயிடுச்சு நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க போறது இல்ல. நான் மும்பைக்கு போறேன் என பதற்றத்துடன் அதை கூறுகிறார். அதற்கு பாக்கியம் இது நான் கேட்டதக்கு பதில் இல்லையே என கூறுகிறார்.

அதற்கு பதில் அளித்த ராதிகாவோ நீங்க என்ன தெரிஞ்சுகிட்டு இங்க வந்தீங்கன்னு எனக்கு தெரியல நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க போறதில்லை எனக்கு எதுவுமே வேண்டாம் என கூறுகிறார். நீங்கள் நேத்து தானே போறேன்னு சொன்னீங்க ஏன் போல என்று பாக்கியா அடுத்தடுத்து கேள்விகளை அடுக்குகிறார். இதனால் ராதிகாவிற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் மயூவுக்கு உடம்பு சரியில்ல அதான் போகலைன்னு சொல்கிறார். அதற்கு எதிர் கேள்வி கேட்ட பாக்கியா மயூவுக்கு உடம்பு சரியில்லைன்னு போகலையா இல்ல உங்களுக்கு கல்யாணம் பண்ணிக்க போறவருக்கு உடம்பு சரியில்லையா என்று போகவில்லையா என்று பாக்கிய திட்ட வட்டமாக கேட்கிறார்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன ராதிகா உடனே பாக்யாவிடம் அவர் ஏமாந்து போன கதையைக் கேட்கிறார். செல்வியும் பாக்கியா அக்கா எல்லா விஷயமும் தெரிஞ்சு தான் இங்க வந்திருக்காங்கன்னு சொல்ல ராதிகாவிற்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. மேலும் மருத்துவமனையில் அன்று நடந்த நிகழ்வுகளை எல்லாம் ராதிகாவிற்கு சொல்லி நினைவூட்டுகிறார் நான் எல்லாரையும் விட உங்களை தானே ரொம்ப நம்புனேன் நீங்க இப்படி பண்ணலாமா என பாக்கியா கேட்கிறார் அதற்கு பதில் அளித்த ராதிகா தனக்கு எதுவுமே தெரிஞ்சு நடக்கவில்லை என கூறுகிறார்.

முன்னாடி தானே தெரியாது இப்ப தெரிஞ்சுகிட்டு தானே இருக்கீங்க அப்புறம் என்கிட்ட வந்து சொல்லி இருக்கலாமே ஏன் சொல்லல என ராதிகாவிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்புகிறார். தன் பக்கம் இருக்கும் நியாயத்தனையும் கூறுகிறார். இதனால் என்ன சொல்வது என்றே தெரியாமல் முழிக்கிறார் ராதிகா. அதோட அந்த எபிசோடு நிறைவடைகிறது. அடுத்த வாரம் ஒளிபரப்பாகும் எபிசோடு இவர்கள் இருவருக்கும் என்ன நடந்தது இந்த பேச்சுவார்த்தை எப்படி முடிவடைந்தது என சொல்லும் காட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Spread the love

Related Posts

Viral Video | உயர்சாதி பிரிவினரின் கால்களை நக்கும் தலித் சிறுவன் | உத்திர பிரதேசத்தில் அரங்கேறிய கொடுமை | விடியோவை பார்க்க பாவமா இருக்கு

உத்தரப்பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயர்சாதி பிரிவினரின் கட்டளையின் பெயரில் அவர்களின் காலை நக்கும்

துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக திருச்சிக்கு வந்திருக்கும் நடிகர் அஜித் | மேலும் புகைப்படங்கள் உள்ளே

நடிகர் அஜித் திருச்சியில் துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக பங்கேற்றுள்ளார். அந்த நேரத்தில் அவருடன் எடுக்கப்பட்ட போட்டோக்கள்

அன்பில் மகேஷுக்கு டெங்கு என கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு இருப்பது பன்றி காய்ச்சல் என உறுதியாகியுள்ளது

டெங்கு காய்ச்சல் காரணமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட

x