பிரபல இயக்குனரும் மற்றும் நடிகருமான பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜாவுக்கு ஏற்கனவே நீர்ச்சத்து குறைபாடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்திருக்கிறது. இதனால் அவருக்கு கடந்த இரண்டு நாட்கள் வீட்டில் வைத்தே மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது அது தீவிரமடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு வருவது சிறந்தது என மருத்துவர்கள் கூற சென்னை டிநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு இவரை கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு நீர்ச்சத்து குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்தனர். இதனால் புதிய ஒரு மருத்துவ குழுவை கொண்டு அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன, இதனால் பெரிதாக எதுவும் ஆபத்து இல்லை எனவும் நான்கு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவ குழு கூறியிருக்கிறது.
