எட்டு வயதில் நான் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன் என ஹிந்தி பிக் பாஸ் பிரபலம் ரோகித் வர்மா தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் மூலம் பெரிதும் அறியப்பட்ட இவர் தனது மாமாவினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன் என மனம் திறந்து கூறியுள்ளார். இவர் பேசிய அந்த நேர்காணலில் தனது குழந்தை பருவத்தில் தனது மாமாவால் நான் வன்கொடுமை செய்யப்பட்டேன் எனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பணத்திற்காக பாலியல் தொழிலாளியாக வேலை செய்து வந்ததை நினைவு கூறுகிறேன். குறிப்பாக எனக்கு 8 வயது இருந்த போது தனது மாமா பாலியல் வன்கொடுமை எனக்கு செய்தார் நான் ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்தவன் ஆனால் எனது குடும்ப உறுப்பினர்கள் மிகவும் பழமையான சிந்தனை கொண்டவர்கள். நான் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும் என் சொந்த மாமாவால் வன்கொடுமை செய்யப்பட்டேன் என் குழந்தை பருவத்திலேயே நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். என்னை புடவை உடுத்தி என் உடம்பில் சூடான மெழுகு பூசி மேலும் கொடூரமான செயல்களை செய்தனர்.
இந்து கடவுளை அவமதித்த திமுக செக்ரட்டரி | வெளுத்து வாங்கும் பாஜக-வினர் | காரணம் என்ன ?

இவை அனைத்தும் மூன்று நான்கு வருடங்கள் தொடர்ந்து செய்தனர். பயத்தின் காரணமாகவே பெற்றோரிடம் நான் இதை சொல்லவே இல்லை. தாஜ் ஹோட்டலுக்கு வெளியே பாலியல் தொழிலாளியாக நான் வேலை செய்தேன். அந்த நேரத்தில் எனக்கு பணம் தேவைப்பட்டதால் பெண்களின் ஆடைகளை அணிந்து கொண்டு நடமாடுவதை செய்தேன். மக்கள் என்னை ஓரிரு முறை அழைத்துச் சென்றனர். இங்கிருந்து கிடைத்த பணத்தில் தான் நான் டிசைனிங் பொருட்களை வாங்கினேன், நான் இதை செய்ய விரும்பியதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. யாரும் என்னை கட்டாயமும் படுத்தவில்லை நான் ஒரு நடிகருடன் டேட்டிங் சென்றேன். ஆனால் அவருக்கு அதிக சம்பளத்தில் வேலை கிடைக்க ஆரம்பித்த பிறகு அவரிடம் நடத்ததை மாறியது” என இப்படியாக அவர் கூறினார்.
