“நாங்கள் காவல் நிலையங்களை முற்றுகையிட போகிறோம், தைரியம் இருந்தால் தமிழக டிஜிபி எங்களை தடுத்து பார்க்கட்டும்” அண்ணாமலை சவால்

பாஜக பிரமுகர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகை இடுவார்கள் மாநில டிஜிபி எங்களை தடுக்க தைரியம் இருந்தால் எங்களை தடுத்து பாருங்கள் என ஆவேசமாக பேசியுள்ளார் அண்ணாமலை.

மோடியின் 8 ஆண்டுகளாக ஆட்சியை பற்றி நாமக்கல் பொதுக்கூட்டத்தில் பேசினார் அண்ணாமலை. அப்போது பேசிய அவர் விஸ்வநாதன் என்ற ஒரு பாஜக பிரமுகர் சில ரவுடிகளால் சரமாரியாக தாக்க பட்டு வெட்டுக்காயங்களை பெற்றுள்ளார். அவர் வேறு யாருமல்ல அந்தப் பிரமுகர் இருந்த அந்த ஊரின் துணைத்தலைவர் தான். அவர்தான் ரவுடிகளோடு சென்று அந்த பாஜக பிரமுகரை வெட்டியுள்ளார்.

அதனால் காயமடைந்த அவர் சுமார் இரண்டு மாத காலங்களாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக பாஜக பிரமுகர்கள் பலர் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என இருந்து விட்டனர். ஆனால் அந்த ரவுடிகளை பற்றி எந்த ஒரு தகவலையும் போலீசார் சேகரித்து அவர்களை கைது செய்யவில்லை. இதனால் நாங்கள் அறவழி போராட்டத்தை கைவிட்டுவிட்டு முற்றுகைப் போராட்டத்தை கையில் எடுக்கப் போகிறோம்.

அந்த ரௌடிகள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் நாமக்கல்லில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷனும் பாஜக பிரமுகர்களால் முற்றுகை இடப்படும் அதில் முதல் முற்றுகையை நான் தனிப்பட்ட முறையில் கையில் எடுத்து நடத்துவேன் என பகிரங்கமாக மிரட்டல் தோனியில் பேசியிருக்கிறார் அண்ணாமலை. மேலும் மாநில டிஜிபிக்கு தைரியம் இருந்தால் எங்களை தடுத்து பாருங்கள் என்று கூறியிருக்கிறார். இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Spread the love

Related Posts

“ஸ்டாலின் நம்பர் 1 முதல்வர் அல்ல ; அவர் இந்த நூற்றாண்டின் நம்பர் 1 ஜோக்கர்” – அமைச்சர் ஜெயக்குமார் சர்ச்சை பேச்சு

எல்லோரும் ஸ்டாலினை நம்பர் ஒன் முதல்வர் என்று சொல்கிறீர்கள் ஆனால் அவன் நம்பர் ஒன் ஜோக்கர்

பச்சை குத்திக்கொண்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு நடந்த கொடுமை.. அதிர்ச்சியடைந்த டாக்டர்கள், இளைஞர்களே உஷார்!

ஆசையாக பச்சை குத்திக்கொள்ள சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி உத்திரபிரதேசம் வாரணாசியில் HIV தோற்று உள்ள

Viral Video | டெல்லியில் கார் ஒன்று பைக் ரைடரை மோதி விட்டு செல்லும் பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியாகி வைரல்

டெல்லியில் ஸ்கார்பியோ கார் ஒன்று டூவீலரை முட்டி முன்னேறி செல்லும் பதை பதைப்பான வீடியோ காட்சியை