முதல்வர் ஸ்டாலினைப் பற்றி அவதூறாகப் பேசிய கன்னியாகுமரியை சேர்ந்த பாஜக பிரச்சார தலைவர் ஜெயப்பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக ஸ்தாபக தின நிகழ்ச்சி கடந்த 2 தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அதில் ஆரல்வாய்மொழியில் கடந்த 6ஆம் தேதி பாஜக சார்பாக கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஜெயப்பிரகாசம். பாஜக எப்படி சக்தி வாய்ந்த ஒரு கட்சியாக உருவானது என்று பாஜகவின் வரலாறுகளை கூறினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் அவர்களை சில கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அன்று நாகர்கோயில் துணை கண்காணிப்பாளர் அவரை கைது செய்ய அவரின் வீட்டிற்கு சென்றபோது போலீசாரை தடுத்து நிறுத்தும் வகையில் 30க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் வீட்டின் முன் அமர்ந்து முற்றுகையிட்டனர்.

அதனால் அவர்களின் கைது நடவடிக்கை சற்று தாமதமானது. அதன்பிறகு போலீசார் அவர்களிடம் எடுத்துக் கூறியபின் நாங்களே அவரை ஸ்டேஷனில் கொண்டுவந்து ஒப்படைக்கிறோம் என்று கூறிவிட்டு அவரை போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
