துபாய் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை அவதூறாக பேசியதால் தற்போது பிஜேபி பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிவந்த எடப்பாடியை சேர்ந்த பிஜேபி பிரமுகர் அருள் பிரசாத்தை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்து கைது செய்துள்ளனர். சேலம் எடப்பாடி அடுத்த நாச்சிபாளையம் பகுதியில் உணவகம் நடத்தி வருபவர் தான் இந்த அருள் பிரசாத் இவர் பிஜேபியை சேர்ந்தவர் ஆவார்.

பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளரான இவரை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்து தற்போது கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் ஸ்டாலின் அவர்கள் அரசு முறை பயணமாக துபாய் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த கோட் சூட்டில் விலை ரூபாய் 17 லட்சம் என்று பல்வேறு புரளிகளையும், அவதூறுகளையும் ஸ்டாலின் மீது அடுக்கியுள்ளர் அருள் பிரசாத்.
