தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வார்டு வாரியாக தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் பவானிசாகர் பேரூராட்சியில் 11 வது வார்டில் வெறும் ஒத்தை ஓட்டு மட்டுமே வாங்கியிருக்கிறார் ஒரு பாஜக வேட்பாளர்.
பவானிசாகர் பேரூராட்சியில் 11 வது வார்டில் பாஜகவிற்கு ஆதரவாக போட்டியிடும் வேட்பாளர் நரேந்திரன் வெறும் ஒரு ஓட்டை மட்டுமே பெற்றிருக்கிறார். அந்த ஒரு ஓட்டும் அவருடைய ஓட்டு தான். அவரது குடும்பத்தாரும், நண்பர்களும், உறவினர்களும் யாருமே அவருக்காக ஓட்டு போடவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒரு நிகழ்வு.