பாஜக கூட்டத்தில் தொண்டர் ஒருவருக்கு மாஸ்க் அணிவது எப்படி என்று தெரியாமல் தவித்த வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது சில கோமாளித்தனமான வீடியோக்களும், நம்மை அசர வைக்கும் வீடியோக்களும் அதை தவிர்த்து நம்மை எமோஷனல் ஆக்கும் வீடியோக்களும் பகிரப்படும். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்த மாதிரி வீடியோக்கள் நம் கண்ணில் பட்டுவிடும்.


அதுபோலத்தான் ஒரு பிஜேபி கூட்டத்தில் ஒரு தொண்டருக்கு கொடுக்கப்பட்ட ஒரு n 95 வகை மாஸ்க்கை அவருக்கு எப்படி அணிவது என்று தெரியாமல் படாதபாடு படுகிறார். அதனால் பக்கத்தில் இருப்பவரையும் அவர் எப்படி அணிந்திருக்கிறார் என்பதை நோட்டமிட்டு ஏதேதோ செய்கிறார் ஆனால் அவரால் அந்த மாஸ்க்கை கூட ஒழுங்காக போட முடியவில்லை.


பிறகு கடைசியாக பக்கத்தில் இருந்தவரிடம் உதவிகேட்டு இது எப்படி அணியவேண்டும் என்று சொல்லுங்கள் என அவரிடம் அறிவுரை வாங்கிய பின்பு அந்த மாஸ்க்கை அவர் சரியாக போட்டார். மேலும் சிலர் பாஜக தொண்டர் களுக்கு ஒரு மாஸ்க் கூட எப்படி அணியவேண்டும் என தெரியவில்லை இவர்களெல்லாம் நாட்டை ஆள்கிறார்கள் என்று கமென்ட் அடித்து வருகின்றனர்.
🤣🤣🤣🤣🤣🤣🤣 pic.twitter.com/FFulphCkpW
— U2 Brutus (@U2Brutus_off) June 17, 2022