தனது மாமன் பெண் காதலனுடன் ஓடிப்போனதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த பூபதி என்பவர், முதலைமச்சர் ஸ்டாலின் குறித்தும், பட்டியல் சமூகத்தினர் குறித்தும் அவதூறாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து திமுக நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில், தகவல் தொழில் நுட்ப சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் பூபதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
