பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு | குண்டு வீசிய நபர் கொலைவழக்கில் சம்மந்தப்பட்டவர் என தகவல் | தேசிய புலனாய்வு வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை

சென்னை தி நகரில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் தற்போது அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

சென்னை தி நகரில் பாஜக அலுவலகம் என்று அழைக்கப்படும் கமலாலயத்தில் நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் பெட்ரோல் புகை குண்டு வீசப்பட்டுள்ளது.

அதற்குப்பிறகு இதனை அறிந்து வந்த R1 மாம்பலம் காவல்துறையினர் இதற்குப் பின்னணி என்ன, இதை செய்தவர் யார் என்று கோணத்தில் விசாரணையை தொடங்கினர். அந்த வேளையில் அங்கு பக்கத்தில் இருந்த சிசிடிவி கேமரா கோப்புகளை ஆராய்ந்ததில் ஒரு மர்ம நபர் அதில் தென்பட்டார். அப்போது தான் வினோத் என்ற நபர் போலீசின் விசாரணைக்கு கீழ் வந்தார்.

இந்த வினோத் என்ற நபர் ஏற்கனவே சில குற்றங்களுக்கு ஆளாகியுள்ள கருக்கா வினோத் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதற்குப் பிறகு அந்த வினோத் என்கிற கருக்கா வினோத்தை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த விசாரணையில் அவர் கூறிய திடுக்கிடும் தகவல் என்னவென்றால் நீட் தேர்வுக்காக பாஜகவின் நிலைப்பாடு எனக்கு சற்றும் பிடிக்கவில்லை, எனவே நீட் தேர்வை எதிர்த்து தான் நான் பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசினேன் என்று பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மேலும் இது அரசியல் நோக்கத்திற்காக நடந்ததா இல்லை மத சார்ந்த ஏதேனும் விஷயத்திற்காக நடந்ததா என்ற கோணத்தில் விசாரிக்கையில் இது அவர் குடிபோதையில் செய்த ஒரு செயல் என போலீசார் இறுதிக்கு வந்தனர். மேலும் இந்த வினோத் என்ற நபர் மீது ஏற்கனவே 4 கொலை முயற்சி வழக்குகளும் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்பிறகு பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் இந்த பெட்ரோல் குண்டு விஷயத்திற்கு தேசிய புலனாய்வு அமைப்பு தீர்வு காண வேண்டும் என்று அவர் தரப்பு வாதத்தை முன்வைத்தார். இதுகுறித்து மேலும் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது :-

“பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை தேசிய புலனாய்வு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்”

“பல்வேறு கொலை முயற்சி வழக்குகளில் சிக்கி உள்ள வினோத் என்கிற நபர் நீட் தேர்வு பிரச்சனைக்காக மட்டும்தான் நான் பெட்ரோல் குண்டு வீசினேன் என்று போலீசார் கூறுவது மிகவும் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் உள்ளது” என்றார்.

Spread the love

Related Posts

“ஏன் மேலயே கை வைக்குறியா…” தீடீரென ராகவா போல் மாறிய கணவன், மனைவி கொடுத்த அதிர்ச்சி புகார் காஞ்சனா பட பாணியில் அரங்கேறிய நிகழ்வு

மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் என்னுடைய கணவன் ஒரு ஆணே கிடையாது என தொடர்ந்துள்ள

Video Viral | “அதிமுகவை சிலர் வீழ்த்த முயற்சிக்கின்றனர்” OPS-க்கு பதிலடி கொடுக்கிறாரா ? EPS | வீடியோ வைரல்

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் கடந்த ஒரு சில தினங்களாகவே மும்முரமாக

டி20 உலக கோப்பைக்கு களம் இறங்கும் இந்திய அணி வெளியானது | யார் யார் டீமில் உள்ளனர் ?

இந்தியாவின் டி20 உலக கோப்பைக்கு களம் இறங்கும் இந்திய அணியின் அதிகாரபூர்வ பட்டியல் வெளியானது சென்ற

x