பாஜக நிர்வாகியான ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் தியாகி இம்மானுவேல் சேகரின் 65 ஆவது நினைவு தினம் கடந்த 16ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதனை ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்களும் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர். இதனாலேயே அந்த மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. திமுக அதிமுக பாஜக என எல்லா கட்சியினரும் இங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது பாஜக தொடர்பான ஒரு வீடியோ பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாஜக சார்பில் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம், முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன். ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த வந்தனர்.

அப்போது தான் இந்த வீடியோவும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது கூட்டம் அலைமோதுகிற அந்த நேரத்தில் கூட்டத்துக்கு நடுவே முன்னாள் எம் பி யும் பாஜக மாநில துணைத்தலைவரும் ஆன சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்தும் போது அவருக்கு பின் மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி சசிகலா புஷ்பாவின் உடல் பாகங்களில் கை வைத்து தடவ முயற்சி செய்திருக்கிறார். சசிகலா புஷ்பா தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு அவரது கையை இரண்டு முறை விளக்கி விட்டிருக்கிறார்.
அதன் பிறகு எதுவுமே நடக்காதது போல பாலகணபதி நின்று தன்னுடைய சில்மிஷம் வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டு வந்திருக்கிறார். தற்போது இந்த வீடியோவானது சமூக வலைதளத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது. இதை திமுக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இது பாரதிய ஜனதா கட்சியா அல்லது பாலியல் ஜல்சா கட்சியா என்று டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
யோ @annamalai_k என்னையி உன் ஆளு இந்தா தடவு தடவுறான் 😂😂😂😂#பாலியல்_ஜல்சா_கட்சி pic.twitter.com/PSit55TtaT
— Mr.அண்டா (@Anda_talks) September 13, 2022