உத்திரபிரதேசத்தில் ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் ஆளும் கட்சி கடந்த 32 ஆண்டுகளில் ஆட்சியை தக்கவைத்ததாக சரித்திரமே இல்லை. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்து அந்த 32 ஆண்டுகால சாபத்தை உடைத்தெறிந்தது பாஜக. மேலும் மூன்று மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையாக வென்றுள்ளது.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் இன்று வெளி வந்துள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி உத்திரபிரதேச மாநிலத்தை தனதாகியது பாஜக.
2 மணி நிலவரப்படி:-
உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளில் 275 இடத்தில் பாஜக முன்னிலை அல்லது வென்றுள்ளது.
எஸ்.பி கட்சி 125 இடத்தில முன்னிலை அல்லது வென்றுள்ளது.
பி.எஸ்.பி கட்சி 4 இடத்தில முன்னிலை அல்லது வென்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி 2 இடத்தில முன்னிலை அல்லது வென்றுள்ளது.
இதை தவிர மத்த மூணு மாநிலங்களிலும் பாஜக பெரும்பான்மையாக வென்றுள்ளது. மீதமுள்ள பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மீ வென்றுள்ளது.