பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கருப்பு எம்ஜிஆர் என்று மதுரையில் மாசாக ஒரு போஸ்டரை பாஜகவினர் ஒட்டியுள்ளனர் இது தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
இப்போதெல்லாம் சில அரசியல் தலைவர்கள் கட்சி தொடங்கும் போதும் இதற்கு முன்பு இருந்த அரசியல்வாதிகள் பலரும் எம்ஜிஆரை ரோல்மாடலாக எடுத்துக் கொண்டு அவரைப் போலவே ஆட்சி செய்வேன் என்று பிரச்சாரம் செய்வார்கள். குறிப்பாக விஜயகாந்த் இதற்கு முன்னர் கருப்பு எம்ஜிஆர் என்று முதல் முதலில் பேசப்பட்டார். ஏனென்றால் அவரின் கட்சியினர் அடிக்கும் போஸ்டர்கள், பேனர்கள் எல்லாம் அவரை கருப்பு எம்ஜிஆர் என்றுதான் குறிப்பிடுவார்கள்.
இதனால் அதிமுகவினர் அப்போது ஆத்திரமடைந்து எம்ஜிஆர் எங்களுக்கு சொந்தமான ஒருவர். நீங்கள் சொந்தம் கொண்டாடக்கூடாது என்றெல்லாம் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பிறகு அன்புமணி ராமதாசும் தன்னை எம்ஜிஆர் போல உருவகப்படுத்திக் கொண்டு அவரின் தொண்டர்கள் போஸ்டர அடித்தனர். மேலும் கமலஹாசன், ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகைபொது கூட எம்ஜிஆர் உடன் தான் ஒப்பிட்டு பேசினார்கள். தற்போது விஜய்யை கூட எம்ஜிஆருடன் தான் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். இதுபோல எந்த அரசியல் கட்சி தலைவர்கள் அல்லது புதுமுக ஆட்கள் அரசியலுக்கு வந்தாலும் முதலில் கையில் எடுப்பது எம்ஜிஆரின் பெயரைத்தான்.

அப்படி தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தொண்டர்களும் எம்ஜிஆர் பெயரை கையில் எடுத்து இருக்கின்றனர். அதாவது மதுரையில் தற்போது பாஜக சார்பாக ஒரு கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஒரு போஸ்டரையும் அடித்து இருந்தனர். அந்த போஸ்டரில் “எட்டு ஆண்டுகள் சாதனை அழைக்கிறார், கருப்பு எம்ஜிஆர் என அண்ணாமலையை உருவகப்படுத்தி இருக்கின்றது மேலும் அந்த போஸ்டரில் பாஜகவின் மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சரவணனின் போட்டோவும் இடம் பெற்றுள்ளது. அவர் போலீஸ் உடையில் புல்லட்டில் வருவதுபோல் அந்த போட்டோ இருக்கிறது. மேலும் எம்ஜிஆருக்கு எதற்காக காவி சாயம் பூசுகிறார்கள் எனவும் ஒருபுறம் கேள்வி எழும்புகிறது. தற்போது இந்த போஸ்டர் தான் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
