சினிமா படங்களை மிகவும் கடுமையாக விமர்சித்து அதன் மூலம் பிரபலமடைந்தவர் தான் யூடூப்பில் ரெவியூ செய்யும் ப்ளூ சட்டை மாறன். இவர் சமீபகாலமாக சமூகவலைதளத்தில் நல்ல வளர்ச்சியை பெற்று வருகிறார். இவரின் ரெவியூ பார்த்துவிட்டு படத்திற்கு செல்லலாமா வேண்டாமா என முடிவு செய்ய இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இவர்ரீசெண்டாக வந்த பீஸ்ட் மற்றும் வலிமை படத்திற்கு மோசமாக ரெவியூ தந்திருந்தார். இவருக்கு பல திரைப்பிரபலங்கள் இவர்களுக்கு எதிராகவும் பேசியிருக்கின்றனர். ஆனால் அவற்றையெல்லாம் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை என்பது போல இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

சமீபத்தில் ஆரி அவர்களும் ஒரு ஆடியோ லாஞ்ச் விழாவில் மாறன் அவர்கள் பேசிய கடுமையான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார். அந்த வீடியோவை ஒருவர் ஷேர் செய்து சரியான செருப்படி என்று பதிவிட்டிருந்தார். அதனை ஆரி அர்ஜுனனுக்கு டேக் செய்து, சரியான ரிப்ளை மச்சி என்று பதிவிட்டிருந்தார்.

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ப்ளூ சட்டை மாறன் அவர்கள், அந்த ட்வீட்டை ஸ்கிரீன்ஷாட் செய்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, முருங்கைக்காய் சிபஸ் படத்தில் நடித்த பிட்டு பட நாயகர் சாந்தனு என்று குறிப்பிட்டுள்ளார். இதனைக் கண்ட விஜய் ரசிகர்கள் அவரை ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்களை 'தரமான செருப்படி' என்று மறைமுகமாக கிண்டல் செய்த 'முருங்கைக்காய் சிப்ஸ்' பிட்டுப்பட நடிகர். பதிலடி தந்த சினிமா ரசிகர்கள். pic.twitter.com/1Z0QyV544S
— Blue Sattai Maran (@tamiltalkies) April 19, 2022