திரைப்படங்களை கொச்சையாக விமர்சித்து, அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளை கேவலமாக பேசி விமர்சனம் செய்யும் தொழிலை செய்து வருபவர்தான் ப்ளூ சட்டை மாறன் என்கிற இளமாறன்.
தமிழ் படம் மட்டுமல்லாது ஹாலிவுட் படங்களையும் வம்புக்கிழுத்து, நடிக்கும் நடிகர்களின் நிறத்தை வைத்து “இவருக்கு 100 லைட் வைத்தால்தான் முகமே தெரியும் போல… அந்த அளவிற்கு கருப்பாக இருக்கிறார்” என்று கொச்சையான விமர்சனத்தை செய்திருப்பவர். நடிக்கும் நடிகர்களின் உருவத்தை வைத்து, நிறத்தை வைத்து கேலிசெய்து பிழைப்பு நடத்துபவர் தான் இந்த ப்ளூ சட்டை மாறன்.
இப்படி இருக்கும் இவர் சமீபத்தில் வலிமை படத்தின் ரிவ்யூ என்ற பெயரில் நடிகர் அஜித்தை கேவலமாக உருவ கேலி செய்து விமர்சித்திருப்பார. படத்தைப் பற்றி கூற எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு, ஆனால் நடிகர் நடிகைகளை உருவ கேலி செய்து நிறத்தின் அடிப்படையில் கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் தவறான செயல் என்று ரசிகர்கள் அவருக்கு கூறிய வண்ணம் உள்ளனர்.

இப்படி வலிமை படத்தில் அவர் கொச்சையான விமர்சனங்களை செய்ததிலிருந்து சினிமா வட்டாரங்கள் பலபேர் அவருக்கு கடுமையான கண்டனங்களை விதித்துள்ளனர் உதாரணத்திற்கு பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர் கே சுரேஷ், மற்றும் சார்பட்டா பரம்பரை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஜான் கொக்கன் உட்பட பல பேர் ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூவை கண்டித்து பல கண்டனங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள பிவிஆர் திரையரங்கில் திரைப்படம் பார்க்க வந்திருந்த ப்ளூ சட்டை மாறனை சிலர் வம்பிழுத்துதாகவும், தாக்கியதாகவும் சில செய்திகள் சமூக வலைதளங்களில் இன்று காலையில் இருந்து பரவி வருகின்றது.
மேலும் இது குறித்து சைட் மீடியாவில் CEO வாக இருக்கும் லோகேஷ் அவர்களும், PVR ல என்னதான் ஆச்சு ? என்று சந்தேகத்திற்கு இடமாக அவரும் ஒரு பதிவை போட்டிருந்தார்.
PVR la enathan aachu?🤔 pic.twitter.com/3qeIlVsuwC
— Lokesh (@LokeshJey) March 17, 2022
இந்த செய்தியை அகில உலக இந்து மத கட்சியின் தலைவர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜேஎஸ்கே கோபி அவர்களும் அவரின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் அவர் அதில் கூறியதாவது :-
“ப்ளு சட்டை மாறன் அவர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்க ஒன்று. கருத்தை கருத்து மூலமாக தான் எதிர் கொள்ள வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிக்க வேண்டும்.. ” என்று பதிவிட்டிருந்தார்.
ப்ளு சட்டை மாறன் அவர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்க ஒன்று..
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) March 18, 2022
கருத்தை கருத்து மூலமாக தான் எதிர் கொள்ள வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிக்க வேண்டும்.. pic.twitter.com/p5RYnqymxR
சென்னை PVR தியேட்டரில் படம் பாக்க சென்ற ப்ளு சட்டை மாறன் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதாக சமூக வளைதளங்களில் செய்தி வரவி வருகிறது…. pic.twitter.com/tTCycjDqjF
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) March 18, 2022
தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தில் இருந்து திரு இளமாறன் அவர்களின் பெயரை நீக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அவற்றையெல்லாம் நான் எடுத்து விட்டேன் என்று ஜேஎஸ்கே கோபி அவர்கள் இதற்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.