“காமெடி நடிகர் போண்டா மணியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்” – மா சுப்ரமணியம்

காமெடி நடிகர் போண்டா மணிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டதாகவும், அவருக்கு உதவ முன் வர வேண்டும் என்று அவருடைய சக நடிகரான பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ பேசி வெளியிட்டிருந்தார். அதனைக்கண்டு போண்டா மணியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என கூறியிருக்கிறார் மா சுப்ரமணியன்.

இலங்கையில் பிறந்து வளர்ந்து போண்டாமணி பவுனு பவுனுதான் என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் தொடங்கி காமெடி நடிகருக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரும் அறியும் படி வளர்ந்தார். மேலும் ஒரு சில கேம் ஷோக்களிலும் அவர் நடித்து வந்தார். குறிப்பாக அவர் நடித்த சுந்தரா ட்ராவல்ஸ், மருதமலை, வின்னர் ஆகிய படங்களில் இவரை பார்க்காத ஆளே இருக்க முடியாது. தற்போது இவருக்கு சினிமாவில் வாய்ப்பு குறைந்து விட்டதால் ரியல் எஸ்டேட் மற்றும் ஒரு சில தனியார் நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார்.

இவருடன் சேர்ந்து நடிக்கும் சக நடிகரான பெஞ்சமின் இவருக்காக ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் பேசியபோது அண்ணா போண்டா மணி அவர்களுக்கு இரண்டு கிட்னிகளும் செயல் இழந்துவிட்டது. அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். உயிருக்கு போராடும் அவருக்கு இந்த வீடியோவை பார்க்கும் நண்பர்கள் மேல் சிகிச்சைக்கு பணம் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தமிழகத்தில் தற்போது அனுமதி வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

மேலும் நாடு விஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தமிழகத்தில் தற்போது அனுமதி வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்ட்டு நாடு வந்து இலங்கையில் இருந்து தமிழகம் வந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தற்போது நடிகராகி திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தகப்பனாக உள்ளார். தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அவரை காப்பாற்ற வேண்டும் அது உங்களால் முடியும். மேலும் அரசியல் தலைவர்கள் யாராவது உதவ முன் வந்தால் நன்றாக இருக்கும்” என கூறியுள்ளார். மேலும் “இலங்கையில் இருந்து அனாதையாக வந்தவர் அனாதையாகவே போகக்கூடாது தயவு செய்து உதவி பண்ணுங்க ப்ளீஸ்” என அந்த வீடியோவில் கொஞ்சம் மிகவும் கண்ணீர் மல்க அழுது கேட்டுள்ளார்.

இந்த நிலையில் போண்டா மணியை மருத்துவமனையில் சென்று நேரில் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்து அவருடைய மருத்துவ செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என தைரியம் சொல்லியிருக்கிறார்.

Spread the love

Related Posts

மறுபடியும் முதல்ல இருந்தா… ? செந்தில்பாலாஜிக்கு சொந்தமானவர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு

“அமிட்ஷா-வே ஒரு குற்றவாளி…” செய்தியாளருக்கு நெத்தியடி பதிலளித்த இயக்குனர் அமீர்

செய்தியாளர் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியாவின் உள்துறை அமைச்சரே ஒரு குற்றவாளி தான் என பேசி இருக்கும்

Latest News

Big Stories