பிரேசில் நாட்டில் வசிக்கும் ஒரு சிறுவனுக்கு இரண்டு ஆண் குறி இருந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்த குழந்தைகளுக்கு பிறக்கும் போது ஒரு சில நோய்கள் தானாகவே வந்துவிடும். அதனை அப்போதே சரி செய்து அதை மேலும் தடுக்காமல் மருத்துவர்கள் அதற்குண்டான மருத்துவ உத்திகளை பயன்படுத்தி அந்த பிரச்சனையை போக்குவார்கள். ஆனால் பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவர்களிடம் வந்த 2 வயது சிறுவன் ஒருவனுக்கு இரண்டு ஆண் குறி இருப்பதாக தெரியவந்துள்ளது. 2 வயது ஆகிவிட்டது இன்னும் இந்த பிரச்னையை கண்டுகொள்ளவில்லையா என ஒரு கேள்வியை மருத்துவர்கள் பெற்றோர்களிடம் வினவினார்.

அது ஒரு புறமிருக்க இந்த மாதிரியான பிரச்சனை 10 லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே வரும் ஒரு அரிய வகை மருத்துவ பிரச்சனை என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த சிறுவனுக்கு டைபிலியா என்ற அரியவகை பாதிப்பு ஏற்பட்டுள்ளது இது வரலாற்றில் இது வரை 100 பேருக்கு மட்டும் தான் வந்துள்ளது முதல் முறையாக 1608 ஆம் ஆண்டு ஆண் ஒருவருக்கு எந்த வகை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் செயழிந்த அந்த ஒரு ஆண்குறியை மட்டும் வெட்டி எடுத்து பழைய நிலைமைக்கு அந்த சிறுவனை கொண்டு சென்றனர். இந்த பிரச்சனையை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அது சிறுநீரக கோளாறு ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
