ராக்கி பாய் போல நாமும் சிகரெட் பிடித்தால் மாஸ் ஆகி விடலாம் என்று நினைத்த சிறுவனுக்கு நேர்ந்த எதிர்பாராத விபரீதம் | என்ன ஆச்சு ?

ஹைதராபாத்தில் சிறுவன் ஒருவன் கே ஜி எஃப் படத்தில் ராக்கி பாய் சிகரெட் பிடிப்பது போல நாமும் சிகரெட் பிடித்தால் அவரைப்போல மாசாகிவிடலாம் என்று எண்ணி சிகரெட் பிடித்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் கே ஜி எஃப் 2. 2018 இல் வெளியான கே ஜி எஃப் 1 படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த கேஜிஎப் 2. இந்த படத்தில் நிறைய இடங்களில் ராக்கி பாய் என அழைக்கப்படும் யாஷ் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் அமைந்திருக்கும். அந்த சிகரெட் காட்சிகள் எல்லாம் நாம் படத்தில் பார்க்கும்போது மாஸாக தான் இருக்கும். அதே போன்று ஒரு காட்சியால் ஈர்க்கப்பட்ட ஐதராபாத் சிறுவன் ஒருவன், நாமும் ராக்கி பாய் போல சிகரெட் பிடித்தால் இப்படி மாசாக மாறிவிடலாம் என்று எண்ணி அந்த சிறுவன் ஒரு பாக்கெட் சிகரெட்டை தனியாளாக ஊதி தள்ளி உள்ளான்.

“காசு ஏமாத்துறாங்க…. யாரையும் நம்பாதீங்க …. ” பிலிப்பைன்ஸ் நாட்டில் வீடியோ போட்டு கதறும் குக் வித் கோமாளி புகழ்

இதனால் உடல் நல குறைவு ஏற்பட்டு அந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப் பிறகு அந்த சிறுவனிடம் கவுன்சிலிங் கொடுத்த மருத்துவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர். மேலும் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் தங்கள் நடிக்கும் காட்சிகளில் சற்று கவனமாக இருந்தால் இதுபோன்ற பிரச்சனைகளையும் தவிர்க்கலாம் என்று மருத்துவர்களும் கூறிவருகின்றனர். இதனை கே ஜி எஃப் யாஷ் ஏற்றுக்கொள்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Spread the love

Related Posts

போதையில் நடிகை திரிஷா சோபாவில் நண்பர்களுடன் கட்டி புரளும் வீடியோ காட்சிகள் வைரல்

நடிகை திரிஷா போதையில் சோபாவில் தோழிகளுடன் படுத்து புரண்டு விளையாடும் வீடியோ ஒன்று தற்போது சமூக

ரஜினி படத்தில் தமன்னாவுக்கு இப்படி ஒரு கதாபத்திரமா ? | படத்தில் ஏகப்பட்ட ஹீரோயின்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னாவுக்கு எப்படிப்பட்ட ஒரு ரோல் என்று தற்போது