சக நண்பர்களுடன் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட மாணவன் திருமுருகன் உயிரிழப்பு
ஆரணியில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் 12ஆம் வகுப்பு மாணவன் திருமுருகன் உயிரிழந்ததாக தகவல். இவர் தேர்வு முடிந்ததும் அதை கொண்டாடும் வகையில் சக மாணவர்களுடன் ஜாலியாக உணவகத்திற்கு சென்று சிக்கன் தந்தூரி அருந்தியுள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த 24 ஆம் தேதி சிக்கன் தந்தூரி சாப்பிட்டபின் மாணவனுக்கு வயிற்றுப்போக்கு வாந்தி மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்ட நிலையில் அதன் பிறகு அந்த மாணவன் உயிரிழந்ததாக தந்தை புகார் அளித்துள்ளார்.
