சென்னை அணியை புறக்கணிப்போம் என்று சென்னை ரசிகர்கள் ஆவேசம்… காரணம் என்ன ??

ஐபிஎல் ஏலம் இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோலாகலமாக பெங்களூரில் நடந்து முடிந்தது இதில் பல அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை எடுத்து அணியை வலுப்படுத்திக் கொண்டனர். அப்போது சென்னை அணி ஸ்ரீலங்காவை சேர்ந்த மகேஷ் தீக்ஷண என்னும் வீரரை ஏலத்தில் 70 லட்சம் கொடுத்து எடுத்தனர்.

தற்போது அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாய்காட் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற ஹாஷ்டாக் அரிதாகி வருகிறது ஏனென்றால் இந்த மகேஷ் தீக்ஷண என்னும் நபர் இதற்கு முன்பு ஸ்ரீலங்கா ராணுவத்தின் கிரிக்கெட் அணிக்காக விளையாடி உள்ளார்.

ஸ்ரீலங்கா ராணுவம் தான் நம் தமிழர்கள் பலரையும் அவர்கள் மிலிட்டரி காம்பில் வைத்து சுட்டுக் கொன்றனர் இதனால் அங்கு விளையாடிய ஒரு நபரை எப்படி நீங்கள் தமிழக அணிக்கு எடுக்கலாம் அப்படி என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு முன்பு முத்தையா முரளிதரனும் இதே மாதிரியான சர்ச்சையை சந்தித்தார் அவர் சென்னை அணிக்கு விளையாடும் போதும் பலரும் இதை விமர்சித்தனர் இப்போது மகேஷ் தீக்ஷணவையும் அப்படித்தான் எல்லோரும் விமர்சிக்கின்றனர். இதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ஸ்ரீலங்கா வீரர்கள் யாரும் தமிழகத்தில் வந்து விளையாடக்கூடாது என்று மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார்.

அதுமட்டுமில்லாமல் ஒரு வருடம் முன்பு முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவிருந்த விஜய் சேதுபதியையும் அனைவரும் கண்டித்தனர் அதனால் அவர் அந்த படத்தை ஒப்புக் கொள்ளாமல் பாதியிலேயே நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

“கொரோன டைம்ல தான் லிப்கிஸ் பண்ணேன் …. நல்ல வேல ஹீரோயின்க்கு எதும் ஆகல” – நடிகர் அசோக்செல்வன்

வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக்செல்வன், சம்யுக்தா நடிப்பில் ஏப்ரல் 1ம் தேதி திரையில் வெளியாகவிருக்கும் திரைப்படம் தான்

மக்கள் செல்ல அனுமதி இல்லாத உலகில் 5 மர்ம இடங்கள்

இந்த உலகில் உள்ள எல்லா இடங்களுக்கும் மக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. ஒரு சில இடங்களில்

Latest News

Big Stories