பிராமின் தட்டு இட்லி, பிராமின் காபி …. ஸ்விக்கி, ஸ்மட்டோ போன்ற ஆன்லைன் Food டெலிவரி கடைகளில் சாதி பெயர்… நெட்டிஸன்கள் கண்டனம்

ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ போன்ற ஆன்லைன் food டெலிவரி செய்யும் செயலிகளில் சாதி பெயரை குறிப்பிட்டு உணவுகளை பெயரிடுவதை நெட்டிசன்கள் தற்போது வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ செயலிகளில் இடம் பெற்றுள்ள பெங்களூரு உணவகங்கள் தங்களின் பெயர்களில் பிராமின் என்ற பெயரை பயன்படுத்திக்கொண்டு உணவுப் பொருட்களை விற்பதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. உணவுகளில் கூட சாதி பெயரை வைத்து அதை களங்கப்படுத்துவதை குறித்து சமூக வலைதளங்களில் பலர் கொந்தளித்துள்ளனர்.

அந்த உணவகங்களின் புகைப்படங்களை பகிர்ந்து உள்ள ட்விட்டர் பயனாளி ஒருவர் பள்ளியில் சிறுவயதில் தனக்கு நேர்ந்த சாதியை கொடுமை குறித்து அனுபவித்ததை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் குறிப்பிட்ட பிராமண உணவு என ஒன்றும் கிடையாது. மீன் மற்றும் இறைச்சி உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகளை உண்ணும் பிராமணர்களை துணை கண்டம் முழுவதும் நாம் காணலாம். உணவை அழகு படுத்துவதற்காக பிராமண வழி என்று ஏதும் கிடையாது. உங்கள் உணவகத்தின் பெயரை பிராமணர் என்று நீங்கள் அழைக்கும் போது அது வெளிப்படையாக சாதியை குறிக்கிறது. அது தவிர வேறு ஒன்றும் இல்லை எனக் கூறியிருக்கிறார்.

“புலி படம் நடித்தேன், அதன் பிறகு என்னை வீட்டிற்க்கு அனுப்பி விட்டீர்கள்….” – கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஆதங்கம்

அதில் பிராமின்ஸ் தட்டு இட்லி, பிராமின் எக்ஸ்பிரஸ், அம்மாஸ் பிராமின் கபே, பிராமின் டிக் பின்ஸ் அண்ட் காபி போன்ற பெயர்கள் ஜொமேட்டோவில் உணவகங்கள் இயங்கி வருகின்றன. ப்ராமின்ஸ் ஸ்பெஷல் புளியோதரை, பிராமின்ஸ் கிச்சன் உள்ளிட்ட பெயர்களில் ஸ்விக்கியில் உணவகங்களும் இயங்கி வருகின்றன. 2018 ஆம் ஆண்டும் இதேபோன்றுதான் ஒரு சம்பவம் அரங்கேறியது. பெங்களூருவை சேர்ந்த ஒரு கேட்டரிங் நிறுவனம் சுத்தமான பிராமண மதிய உணவு வழங்குவோம் என பதாகையை ஏந்தி விளம்பரப்படுத்தியது.

அந்த விளம்பர பதாகை படத்தை வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான டாக்டர் பி கார்த்திக் ட்விட்டரில் வெளியிட்டு விமர்சித்து இருந்தார். பெங்களூருவில் அதை சுற்றி உள்ள சில பகுதிகளில் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே தயாரிக்கப்பட்ட தூய பிராமண உணவு டெலிவரி செய்யப்படும் என்று விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்தது. இது போன்ற விளம்பரங்கள் செய்யப்படுவது இது முதல் முறை அல்ல மேலும் சாதியப் பெயர்களில் இயங்கும் உணவகங்கள் மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சமூக ஆர்வலர்களின் கருத்தாக பார்க்கப்படுகிறது.

Spread the love

Related Posts

குட்டி ஆடையை அணிந்து கொண்டு கவர்ச்சி தரிசனம் அளித்த நடிகர் சாக்க்ஷி அகர்வால் | மேலும் புகைப்படங்கள் உள்ளே

பிக்பாஸ் மூலம் பிரபலமாகி அதன்பிறகு சில திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி

எம்மாடியோவ் இவ்வளவு லட்சமா ? | இயக்குனர் வெற்றிமாறனின் புதிய BMV பைக் வீடியோ வைரல்

பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் தான் வெற்றிமாறன். இவர் தற்போது தமிழ்

“அடுத்த 10 வருஷத்துல இவரு தான் CM..” சமயம் பார்த்து லெஜெண்ட்டை கோர்த்து விட்ட லெஜெண்ட் பட நடிகை…. அண்ணாச்சியை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்

லெஜென்ட் சரவணன் இன்னும் பத்து வருடங்களில் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவார் என அந்த படத்தின் நாயகி