முதுகில் ஏற்பட்ட உள்ள காயம் காரணமாக அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு ஓய்வு தேவை என மருத்துவ குழு அறிவித்துள்ளதால் உலகக் கோப்பை டி20 தொடரில் இருந்து பும்ரா வெளியேறி இருக்கிறார்.
செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட பும்ராவுக்கு முதுகில் உள்ள காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று சவுத் ஆப்பிரிக்காவுடன் இந்தியா விளையாடிய அந்த முதல் டி20 போட்டியில் பும்ரா வெளியேறினார். தற்போது அவருடைய காயத்தை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு சிகிச்சை செய்யும் அளவிற்கு எதுவும் பாதிப்பு இல்லை என கூறி ஆனாலும் நாலு முதல் ஆறு மாதங்கள் கட்டாயமாக ஓய்வு தேவைப்படும் என கூறியிருக்கின்றனர் என்று செய்திகள் வெளி வந்திருக்கிறது.

இந்தியாவிற்கு ஒரு நட்சத்திர பௌலராக திகழ்ந்த பும்ரா வெளியேற்றம் இந்தியாவுக்கு பெரிய அடியாகவே கருதப்படுகிறது. ஏனென்றால் டெத் ஓவர்களில் பும்ரா வைத்தான் மலை போல நம்பி இருப்பார் ரோஹித் சர்மா. அவரின் ஒரு துருப்புச் சீட்டான பும்ராவுக்கு இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டுள்ளதால் இந்திய அணிக்கு இது ஒரு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கிறது.
மேலும் அதற்கு பதில் இந்திய அணியில் ஷமி அல்லது சஹர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. மேலும் சிராஜ் அவர்களும் வரலாம் என்று ஒரு தரப்பு கூறுகிறது. அதனால் பும்ராவிற்கு பதில் இந்திய அணியில் இடம்பெறப் போவது யார் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உலகக்கோப்பை போட்டிக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. அதனால் சீக்கிரமே பும்ராவிற்கு பதில் அணிக்கு வரப்போவது யார் என்பதை இந்திய அணி அறிய வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
