சேலம் எடப்பாடியில் கல்லூரி பேருந்து மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கோழிப்பண்ணை என்ற இடத்தில் இந்த விபத்து நடந்திருக்கிறது. இந்த ஒரு கோர விபத்தினால் தனியார் பேருந்து மற்றும் கல்லூரிப் பேருந்தில் பயணித்த மாணவ மாணவிகள் மற்றும் பயணிகள் 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

இந்த விபத்தை கண்டு அதிர்ந்து போன அந்த பகுதி மக்கள் அங்கே திரண்டு வந்து படுகாயம் அடைந்தவர்களை உடனே மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சிலரை எடப்பாடி மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கும், மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பவர்களை உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை கண்டு தகவலறிந்து வந்த காவல்துறையினர் மேலும் அங்கே சிக்கி இருப்பவர்களை மீட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அந்த பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் எடப்பாடி மற்றும் சங்ககிரி மருத்துவமனைகளில் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் இந்த சிசிடிவி வீடியோ காட்சி அந்த தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் ஷேர் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த விபத்தில் சிக்கியவர்கள் சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
SHOCKING : Bus Accident near Edappadi (Salem). 40 injured.#ACCIDENT | #SalemBus pic.twitter.com/kjXQ1W3URE
— Aathiraa Anand (@AnandAathiraa) May 18, 2022