“பேருந்து கட்டணம் உயர்த்த படவில்லை வதந்தியை நம்பவேண்டாம் தப்பான அட்டவனையை பகிர்ந்து வருகின்றனர்” – போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர்

அரசு பேருந்துகள் கட்டணம் உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவி வருகிறது. அட்டவணை தயாராகி விட்டதாகவும் செய்திகள் பரப்பப்படுகின்றன. இதுகுறித்து என்னிடம் கேள்வி கேட்ட போது அவ்வாறு அட்டவணையை இன்னும் தயாராகவில்லை என கூறியிருக்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர்.

இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துக்கான ஒப்பந்தம் விடும்போது ஒரு மாநிலத்தில் கட்டணம் ஏற்றப்பட்டு, அந்த மாநிலத்தில் நுழையும் இன்னொரு மாநில பேருந்து கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது ஒப்பந்தத்திற்கான வீதி. அப்படிதான் அட்டவணை வழங்கப்படும். கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் அந்த மாநிலங்களுக்கு செல்லும் தமிழக அரசு பேருந்து மட்டுமே அந்த மாநிலத்திற்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.

விக்ரம் பட விழாவில் உதயநிதி முன் “இங்க எல்லாருக்கும் விடியல் தரப்போறது நான் தான்” என வசனம் பேசி அரசியல் செய்த கமல்

எனவே அந்த அட்டவணையை குழப்பிக் கொண்டு தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து பேருந்துகளும் கட்டண உயர்வு என்று ஒரு அட்டவணையை தாமாகவே உருவாக்கி அதை பகிர்கின்றனர். இது ஒரு தவறான கருத்து என நிரூபித்துள்ளார். மேலும் பேசியதாவது கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து கழகங்களில் நிதி சூறையாடப்பட்டு மிகவும் நெருக்கடியில் இருந்தாலும் நமது மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாத வகையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் பழையபடியே வைத்திருக்கிறார்.

இதோடு மட்டும் முடியாமல் தமிழக நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய மிக அற்புதமான திட்டத்தை வழங்கியிருக்கிறார். கடந்த நிதி ஆண்டில் 112 கோடி இலவச பயணங்கள் நிகழ்ந்துள்ளன இதற்கான நிதியை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களே வழங்கி வருகிறார். இவ்வாறு ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து கட்டண உயர்வு இல்லாமல் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயங்கி வரும் சூழலில் கட்டண உயர்வு அட்டவணை தயார் ஆகிவிட்டது என தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறி இருக்கிறார்.

Spread the love

Related Posts

உள்ளாடை தெரியுமாறு சட்டை பட்டனை கழற்றி கவர்ச்சி விருந்தளித்த ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இருப்பவர் தான் ஆண்ட்ரியா இவர் பல தமிழ்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தமிழகத்தில் தற்போது அனுமதி வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

ஆர் எஸ் எஸ் அணிவகுப்புக்கு தமிழகத்தில் தற்போது அனுமதி வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். தமிழகத்தில்

உத்திரபிரதேச சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ புகையிலை போடும் வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்திரபிரதேச சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ ஒருவர் புகையிலை போடும் வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகளிலிருந்து