இறந்து போன தாய் மாமனை மெழுகுச் சிலை செய்து அக்காள் குழந்தைகளை உட்கார வைத்து காது குத்த பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வினோபா நகரை சேர்ந்த சவுந்தரபாண்டி மற்றும் பசுங்கிளி தம்பதியினருக்கு மகனாக இருப்பவர்தான் பாண்டித்துரை. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பைக் விபத்தில் இறந்துவிட்டார். இவரது நீண்ட நாள் கனவு அக்காள் மகளை தன் மடியில் வைத்து காது குத்த வேண்டும் என்று தான். இதனால் இவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பெங்குலுருவில் 5 லட்சம் செலவில் அவரைப் போலவே ஒரு மெழுகு சிலை செய்து அதன் மடியில் இரண்டு குழந்தைகளையும் உட்கார வைத்து காது குத்தி நெகிழ்ச்சி படுத்தினர் அந்த குடும்பத்தினர்.

தம்பியின் ஆசையை நிறைவேற்றிய தங்கை மற்றும் அவரது குடும்பத்தினரை பார்த்து அனைவரும் நெகிழ்ச்சியடைந்தனர்.