சென்னையில் பிரபல திரையரங்கு ஆனா ஆல்பர்ட் திரையரங்கம் சொத்துவரி செலுத்தாதன் காரணமாக அதிரடியாக சீல் வைத்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு சொத்து வரியை வசூலிக்க அதிகாரிகள் முன் வரலாம் என உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் நிலுவையில் உள்ள தொகைகளை வசூலிக்க ஆங்காங்கே முகாம்கள் வைத்துள்ளனர். அந்த முகாம்களை அமைத்து வசூலை தீவிரப்படுத்தி வருகின்றனர். 2021 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைக்கான வரி கட்டுவதற்கு இன்று (31-3-2022) கடைசி நாள் என்பதால் வரி கட்டும் படி சென்னை மாநகராட்சி அவசர படுத்தி வருகிறது. மேலும் கால அவகாசம் கொடுத்தும் வரி கட்டாதவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க பட்டு ஜப்தி செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

சென்னையில் இதன்படி நேற்று வரை 730 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் அது 750 கோடியைத் தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி ஆல்பர்ட் தியேட்டர் நிர்வாகம் சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி ஆக 50 லட்சத்திற்கும் மேலாக செலுத்த வேண்டியுள்ளது. தியேட்டரின் கேளிக்கை வரி மட்டும் 14 லட்சம் கட்ட வேண்டியது இருக்கிறது. இது பலமுறை அவர்களுக்கு வலியுறுத்தியும் நோட்டீஸ் அனுப்பியும் அந்த ஆல்பர்ட் தியேட்டர் நிர்வாகம் வரியைக் கட்ட முன்வராததால். இன்று தியேட்டர் ஜப்தி செய்யப்படுவதாக மாநகராட்சி அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
