சூர்யா நடித்து சென்ற வருடம் வெளியாகி பல தரப்பு மக்களையும் கவர்ந்த படம் தான் ஜெய் பீம். இந்த படத்தை கூட்டத்தில் ஒருத்தன் படத்தை இயக்கிய ஞானவேல் ராஜா இருக்கிறார். இந்த படத்தை சூர்யா தயாரித்தும் இருந்தார்.
இந்த படத்திற்கு ஆஸ்கார் அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் என்னதான் இந்த வரவேற்புகள் கிடைத்தாலும் ஒரு தரப்பு மக்கள் இந்த படத்தை தொடர்ந்து வசைப்பாடி வந்தனர். அதாவது வன்னியர்களை இந்த படம் தாக்கியதாக கூறி அவர்களின் உணர்வு புண்பட்டதாக கருதி இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி தொடர்ந்து மனுக்களை கொடுத்து வந்தனர்.

மேலும் சூர்யா படம் வெளியாகும் திரையரங்குகள் அடித்து நொறுக்கப்படும் எனவும் நேரடியாக மிரட்டல் விட்டனர். இதைத்தொடர்ந்து சூர்யாவின் வீட்டிற்கும் அப்போது பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அந்த அளவிற்கு மிகவும் பூதாகரமாக வெடித்த இந்த சர்ச்சைக்கு தற்போது சென்னை நீதிமன்றம் ஜெய் பீம் படத்தின் தொடர்பான விவகாரத்தில் நடிகர் சூர்யாவிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கினை ஜூலை 21ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
