தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடைக் கட்டுப்பாடு குறித்து விளம்பரப் பலகையை வைக்க வேண்டும் என்ற பொதுப்படையான உத்தரவுக்கு செவி சாய்காமல். ஆடை கட்டுப்பாடு அமலில் இருக்கும் கோவில்களுக்கு மட்டும் விளம்பரப் பலகை அல்லது அறிவிப்பு பலகையை வைத்து கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
கோவில்களில் ஆடை கட்டுப்பாடுகளை மீறி பிற மதத்தினரும் கோவிலுக்குள் வருவதால் கோயிலின் புனிதம் கெடுகிறது. இதனால் மற்ற மதத்தினரை உள்ளே அனுமதிக்க கூடாது என்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடை கட்டுப்பாடு விதியை தீவிரமாக்கி ஆடை கட்டுப்பாடு பற்றி அறிவிப்பு பலகையை வைக்க வேண்டுமென்றும், திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை கொடுத்திருந்தார்.
அந்த வழக்கு தற்போது தலைமை நீதிபதி முனீஸ்வர பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோரின் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் எந்தெந்த கோவில்களில் ஆடை கட்டுப்பாடு அமலில் இருக்கிறதோ அந்தக் கோயில்களில் மட்டும் நீங்கள் அறிவிப்பு பதாகையை வைக்கலாம்.
தமிழகத்தில் உள்ள எல்லா கோயில்களும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என பொதுப்படையான தீர்ப்பை வழங்க இயலாது. ஆகையால் ஆடை கட்டுப்பாடு அமலில் உள்ள கோவில்களில் மட்டும் அந்தந்த கோயில் நிர்வாகமே அறிவிப்பு பலகையை வைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து விட்டது.